Published:Updated:

டிக்டாக்குக்கு மாற்று; `சில் 5’ செயலி! - அசத்தும் திருப்பூர் பட்டதாரி நண்பர்கள்

சில்5 செயலியை உருவாக்கிய நண்பர்கள்

டிக்டாக்குக்குப் பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த 5 பட்டதாரி நண்பர்கள்.

டிக்டாக்குக்கு மாற்று; `சில் 5’ செயலி! - அசத்தும் திருப்பூர் பட்டதாரி நண்பர்கள்

டிக்டாக்குக்குப் பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த 5 பட்டதாரி நண்பர்கள்.

Published:Updated:
சில்5 செயலியை உருவாக்கிய நண்பர்கள்

இளசுகள் முதல் பெரியவர்கள் வரை எனப் பலரும் பயன்படுத்தி அதகளம் செய்த ஒரு மொபைல் செயலி என்றால் அது டிக்டாக் தான். `டிக்டாக்கில் ஆபாசம் அதிகமாக இருக்கிறது. இந்தச் செயலியை தடை செய்ய வேண்டும்’ என இந்தச் செயலிக்கு எதிராகப் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வந்தன. இருந்தாலும் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பி வந்தது டிக்டாக் செயலி. இதற்கிடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையையொட்டி சீன பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுவானது. அதேநேரம், சீன நாட்டைச் சேர்ந்த மொபைல் செயலிகள் மூலம், இந்தியாவின் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

சில்5 செயலி
சில்5 செயலி

அதன்பிறகு டிக்டாக்கின் இடத்தைப் பிடிக்கவும், டிக்டாக்குக்கு மாற்றாகவும் வர பல செயலிகள் முனைப்பு காட்டின. அந்தவகையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து டிக்டாக் செயலிக்கு மாற்றாக `சில்5’ (chill5) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (26), சௌந்தரகுமார் (28), சந்தீப் (25), கோகுல் (25), வெங்கடேஷ் (25) ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்தச் செயலியை வடிவமைத்துள்ளனர். டிக் டாக் போலவே காட்சி தரும் இந்த செயலி, டிக் டாக் போலவே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்கள் கொண்டுள்ளது. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து சில்5 செயலி உருவாக்கத்தில் ஒருவரான கோகுல் என்பவரிடம் பேசினோம். `இந்திய மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மொபைல் ஆப்கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கின்றன. எனவே, முழுக்க பாதுகாப்பான, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ஆப்பை மக்களிடம் சேர்க்க வேண்டுமென நினைத்தோம்.

சில்5 செயலி உருவாக்கத்தின் போது
சில்5 செயலி உருவாக்கத்தின் போது

எங்களோட வெப் டிசைனிங் கம்பெனி மூலமாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட வெப்சைட்டுகளை டிசைன் செய்து கொடுத்திருக்கிறோம். ஒரு மொபைல் ஆப் உருவாக்குவது என்பது இதுதான் முதல்முறை. ஜனவரி மாதம் டிக்டாக்கைப் போலவே ஒரு ஆப்பை உருவாக்க ஆரம்பித்தோம். சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பானதாகவும், தகவல்கள் திருடப்படாத வகையில் கட்டமைத்து ஜூன் 4-ம் தேதி பிளேஸ்டோரில் பதிவேற்றினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிக்டாக்கில் உள்ள ஆபாசம், ரத்தம் தெரிவது போன்ற வன்முறை காட்சிகள் போன்றவற்றை எங்களுடைய மொபைல் ஆப்பில் அனுமதிக்க மாட்டோம். இதைத் தடுப்பதற்காக இப்போது ரிப்போர்ட் பட்டன் வைத்திருக்கிறோம். தானாகவே இப்படியான வீடியோக்களை நீக்குவதற்கான அல்காரிதம் டிஸைன் செய்து வருகிறோம். வீடியோவை எத்தனை பேர் பார்த்தாங்கன்னு காட்டுகின்ற வகையில் `வியூஸ் கவுண்ட்’ எங்க ஆப்ல இருக்கு. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களை வைத்து பொது அறிவு மற்றும் கல்வி சம்பந்தமான சின்னச் சின்ன வீடியோக்களை போஸ்ட் செய்யவிருக்கிறோம். டிக்டாக்குக்கு முன்னாடியே எங்க ஆப்பை ரிலீஸ் பண்ணிட்டோம்.

நாங்க நினைச்ச அளவுக்கு எங்க ஆப் பெருசா ரீச் ஆகலை. டிக்டாக் ஆப் தடை செஞ்ச செய்தியைக் கேட்டதும் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இப்போ, நிறைய பேர் எங்க ஆப்பை பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய மொபைல் ஆப்புக்கு மக்கள் ஆதரவு கொடுப்பாங்கன்னு நம்புறோம். இன்னும் இன்ஸ்டாகிராம், ஹலோ ஆப் மாதிரியான டிஸைன்களில் புதிய ஆப்களைத் தயார் செய்ய பிளான் பண்ணியிருக்கோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism