Published:Updated:

முன்னேறும் டிக் டாக், PUBG...! 2019-ன் டாப் ஆப்ஸ் & கேம்ஸ் இவைதான்

அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது ஃபேஸ்புக் மெஸஞ்சர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவைதான்.

டிக் டாக், PUBG
டிக் டாக், PUBG

2019ஆம் ஆண்டு அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மற்றும் விளையாட்டுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது App Annie என்னும் பிரபல ஆய்வு நிறுவனம்.

வருடாவருடம் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்றவாறு ஆப்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எவ்வளவு மேம்பட்ட ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செயலிகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதால் பயனர்களே ஆப்களைப் பார்த்துப் பார்த்துதான் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களைக் கவர புதுப்புது அப்டேட்கள், வித்தியாசமான ஐடியா என தினம்தினம் புதிதாக ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் `அன்இன்ஸ்டால்'ஆவது உறுதி. இப்படியான சூழலில் இந்த வருடம் எந்தெந்தச் செயலிகள் மற்றும் விளையாட்டுகள் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

டாப் 10 ஆப்ஸ் & கேம்ஸ்
டாப் 10 ஆப்ஸ் & கேம்ஸ்
பெண்களைக் காக்கும் `காவலன்' செயலி... பயன்படுத்துவது எப்படி? #Walkthrough

அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது ஃபேஸ்புக் மெஸஞ்சர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய ஆப்கள்தான். இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக வலைதளங்களைப் பின்னால் தள்ளி நான்காம் இடத்தை டிக் டாக் செயலி பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் புது வரவாக ஏழாம் இடத்தை `லைக்' ஆப் பிடித்துள்ளது. பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியான நெட்ஃபிளிக்ஸ் ஒன்பதாம் இடத்தையும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்பான ஸ்பாட்டிஃபை பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

PUBG
PUBG

அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம்களில் வரிசையில் முதல் மூன்று இடங்களில் Free fire, PUBG Mobile மற்றும் Subway Surfers ஆகிய செயலிகள் உள்ளன. அடுத்த மூன்று இடங்களை Good job games என்ற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த Color bump 3D, Fun race 3D மற்றும் Run race 3D ஆகிய செயலிகள் பிடித்துள்ளன.

கடந்த வருடம் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த PUBG இந்த வருடம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. PUBGக்குப் போட்டியாக அக்டோபர் மாதம் வெளியான Call of duty: Mobile கேம் இரண்டே மாதங்களில் அதிகளவு பதிவிறக்கம் செய்யப்பட்டு இந்த தரவரிசைப் பட்டியலில் பத்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.