Published:Updated:

அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 NFT-க்கள்!

NFT
News
NFT

கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது NFT-க்கள் மீதான மோகம்.

2021-ஐ, NFT-க்களின் ஆண்டு எனக் கூறலாம். டிஜிட்டல் கரண்ஸிக்களாக கிரிப்டோகரண்ஸிக்களை உருவாக்கி விட்டாயிற்று. அவற்றைக் கொண்டு வாங்குவதற்கு ஏதாவது உருவாக்க வேண்டுமே என NFT-க்களை உருவாக்கி வெளியிடத் தொடங்கி அது இந்த வருடம் ஹிட்டடித்திருக்கிறது. ஆனால், முதல் NFT உருவானது 2014-ம் ஆண்டு என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா.

கெவின் மெக்காய் என்ற ஒருவர் தான் 'Quantum' என்ற பெயரில் முதல் NFT-யை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. அன்று தொடங்கி, இன்று கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது NFT-க்கள் மீதான மோகம். இதுவரை அதிக விலைக்கு ஏலம் போன NFT-க்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. எந்தெந்த உப்பிட்ட-க்கள் என்று பார்த்துவிடலாமா?

10. World Wide Web Source Code:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

'This Changes Everything' என்ற பெயரில் World Wide Web-ன் சோர்ஸ் கோடை NFT-வடிவில் சதபீஸ் (Sotheby's) நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விட்டார் அதனை எழுதியவரான டிம் பெர்னர்ஸ் லீ. 9,555 வரிகள் கொண்ட அந்த சோர்ஸ் கோடானது 30 நிமிட அனிமேட்டட் வீடியோவாக NFT வடிவில் 5.43 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இது மட்டும் இல்லாமல், அந்த சோர்ஸ் கோடு குறித்த டிம் பெர்னர்ஸ் லீயின் கடிதம் ஒன்றும், மொத்த சோர்ஸ் கோடும் அடங்கிய டிஜிட்டல் போஸ்டர் ஒன்றும் இந்த NFT-யில் அடக்கமாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

9. கிரிப்டோபங்க் #5127:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

NFT-க்களில் நீங்கள் ஆர்வம் உடையவராக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த கிரிப்டோபங்க் (CryptoPunk) NFT-க்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். 2017-ல் லார்வா லேப்ஸ் நிறுவனத்தை நிறுவிய மேட் ஹால் மற்றும் ஜான் வாட்கின்சன் இருவரும், வித்தியாசமான உருவங்களை உருவாக்கும் கம்ப்யூட்டர் கோடு ஒன்றை எழுதியிருக்கிறார்கள். இந்த கம்ப்யூட்டர் கோடு 10,000 வித்தியாசமான உருவங்களை உருவாக்கியிருக்கிறது. டிஜிட்டலாக பிக்ஸல் வடிவில் இருக்கும் இந்த உருவங்களுக்கு கிரிப்டோபங்க் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் அலகாரிதம் கொண்டு கணினியே உருவாக்கியது என்பது ஒன்று போல் மற்றொன்று இருக்காது. மொத்தம் பத்தாயிரம் கிரிப்டோபங்க்-கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணநலனுடன் இருக்கும் வகையில் அந்தத் தோற்றத்தின் வெளிப்பாடு இருக்கும். இதனை உருவாக்கிய பிறகு எத்திரியம் வாலட்டை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும், இந்த NFT-க்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என கொடுத்திருக்கிறார்கள். அப்போது இவற்றுக்குப் பெரிய வரவேற்பு இல்லை. இன்று அதிக விலைக்கு விற்பனையாகும் NFT-க்கள் பட்டியலில் டாப் 10-ல் இருக்கிறது இந்த கிரிப்டோபங்க் NFT.

ஒவ்வொரு டிஜிட்டல் பிக்சல் உருவம் கொண்ட NFT-யும் 'CryptoPunk #xxxx' எனக் குறிப்பிட்ட எண்ணுடன் பெயரிடப்பட்டிருக்கும். அப்படி CryptoPunk #5127 என்ற NFT தான் 5.44 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்த ஒரு கிரிப்டோபங்க் மட்டும் இல்லை, டாப் 10 பட்டியலில் நான்கு இடங்கள் கிரிப்டோபங்க் NFT-க்களுக்குத் தான். அந்த 10,000 உருவங்களையும் ஒரே புகைப்படத்தில் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

8.Ocean Front:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

மைக் வின்கேல்மண் (பீப்பிள் (Beeple) என்று அறியப்படுபவர்) இந்தாண்டின் NFT சென்சேஷன். இவருடைய NFT ஒன்று தான் இந்த ஆண்டில் அதிக விலைக்கு ஏலம் போன NFT-யாக இருக்கிறது. ஆனால், இது அது இல்லை. இது அவருடைய மற்றொரு NFT. 'Ocean Front' எனப் பெயரிடப்பட்ட இந்த NFT-யில் ஒரு கடலின் மேலே கட்டுமானம் எழுப்பி, அதன் மேல் ஷிப்பிங் கன்டெய்னர்கள் இருக்க, அதன் மேலே ஒரு மரம் இருப்பது போல உருவாக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தைக் காட்சிப்படுத்துவதற்காக இந்த NFT-யை உருவாக்கியதாகத் தெரிவித்திருக்கிறார் இதனை உருவாக்கிய மைக் வின்கேல்மண். இந்த NFT-யானது 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. A Coin for the Ferryman:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

சூப்பர்ரேர் என்ற ஏலத்திற்கான தளத்தில் XCOPY என்ற பயனர் பெயர் மூலம் அறியப்படும் டிஜிட்டல் NFT மேக்கர் ஒருவரின், 'A Coin for the Ferryman' என்ற NFT இந்த ஆண்டு 1330 எத்திரியம்-க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது இந்த NFT. இந்த NFT-யை 0xclipse என பயனர் பெயர் கொண்ட நபருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு 0.5 எத்திரியம்-க்கு, அதாவது 139 அமெரிக்க டாலர்களுக்கு XCOPY விற்றிருக்கிறார். அதன்பிறகு electricmeat என்ற பயனர் பெயர் கொண்ட நபருக்கு அந்த NFT மாற்றப்பட்டு தற்போது 6 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது. (கிரிப்டோ உலகில் ஒரு NFT-யை விற்பவர் மற்றும் வாங்குபவர்களிடையே தனிப்பட்ட தகவல்களைக் கண்டறிய முடியாது. எனவே, அவர்கள் குறிப்பிட்ட தளத்தில் வைத்திருக்கும் பயனர் பெயர் மூலமே அறியப்படுவார்கள்)

6. Crossroad:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

2020 அமெரிக்க தேர்தல் முடிவுகளை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு 10 நொடி வீடியோ ஒன்ற NFT வடிவில் ஏலம் விட்டிருந்தார் மைக் வின்கேல்மண். ஆம், மேலே நாம் பார்த்த அதே மைக் வின்கேல்மண் தான். அந்த 10 நொடி வீடியோவில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோற்று அவர் மேல் அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டது போல உருவாக்கப்பட்டிருக்கும். இந்த 10 நொடி வீடியோவானது 6.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது (அந்த 10 நொடி NFT வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்).

5. கிரிப்டோபங்க் #3100:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

லார்வா லேப்ஸ் நிறுவனர்களின் மற்றொரு சைபர்பங்க் டிஜிட்டல் பிக்ஸல் உருவம் கொண்ட NFT. இந்த NFT-யானது 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த 'CryptoPunk #3100' NFT-யை தற்போது வைத்திருக்கும் நபர், அதனை 35,000 எத்திரியம்-க்கு (91.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு) விற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை 91 மில்லியன் டாலர்களுக்கு வேறு ஒரு NFT ஆர்வலர் இந்த சைபர்பங்க் NFT-யை வாங்கினால், NFT வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட NFT-யாக இது தான் இருக்கும்.

4. கிரிப்டோபங்க் #7804

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

இந்த கிரிப்டோபங்க் விற்பனையானது கடந்த மார்ச் மாதம். அந்த நேரத்தில் அதிக விலைக்கு விற்பனையான கிரிப்டோபங்க் என்ற சாதனையைச் சொந்தமாக்கியிருந்தது இந்த கிரிப்டோபங்க் #7804. 7.56 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த கிரிப்டோபங்க் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

3. கிரிப்டோபங்க் #7523

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

தற்போது அதிக விலைக்கு ஏலம் போன கிரிப்டோபங்க் NFT-க்களில் முதல் இடத்தில் இருக்கிறது இந்த 'கிரிப்டோபங்க் #7523' NFT. சுமார் 11.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சதபீஸ் தளத்தின் மூலம் இந்த கிரிப்டோபங்க் 7528 NFT ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

2. Human One:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

இதுவும் ஒரு NFT தான், ஆனால் இதனை ஹைபிரிட் NFT என வைத்துக் கொள்ளலாம். இந்த NFT-யானது கணினித் திறையில் அல்லாது, இதற்கென தனியாக ஒரு பெட்டியை வடிவமைத்திருக்கிறார்கள். வேறு யாருமில்லை, இங்கேயும் மைக்கேல் வின்கேல்மண் தான் இதனை வடிவமைத்திருக்கிறார். ஏழு அடி கொண்ட ஆளுயரப் பெட்டி ஒன்றை வடிவமைத்து அதில் நான்கு பக்கமும் எல்இடி ஸ்கிரீன்களை வைத்து அந்த ஸ்கிரீனில் Human One எனப் பெயரிடப்பட்ட வீடியோவை எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் போது, அது பெட்டியின் உள்ளே ஒரு மனிதன் நடந்து கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது இந்த NFT. இதன் சிறப்பாக NFT ஆர்வலர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், இந்த வீடியோவை தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ரசனைக்கேற்ப சில விஷயங்களைச் சேர்ப்பது, நீக்குவது என மைக்கேல் ரிமோட் அக்ஸஸ் கொண்டு மாற்றங்களைச் செய்து கொண்டே இருப்பாராம். இந்த ஹைபிரிட் NFT-யானது 28.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.

1. Everydays: The First 5000 Days:

Top 10 expensive NFTs sold in auction
Top 10 expensive NFTs sold in auction

மிக அதிக விலைக்கு ஏலம் போன NFT-யாக இந்த வருடம் சென்சேஷனானது மைக் வின்கேல்மணுடைய இந்த NFT. மைக்கேல் வின்ஹெல்மன் 5000 நாட்களாக, ஒவ்வொரு நாளும் ஒரு டிஜிட்டல் படம் என 5000 படங்களை உருவாக்கியிருக்கிறார். அந்த 5000 படங்களும் சேர்த்த ஒரே படைப்பு, NFT தான் 'Everydays: The First 5000 Days' NFT. இதனை 69.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார் NFT ஆர்வலர் ஒருவர். அந்த NFT ஆர்வலர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரில் வசிக்கும் விக்னேஷ் சுந்தரேசன் என்பவர். இவர் மெட்டாவெர்ஸ் டிஜிட்டல் அருங்காட்சியகத்தில் இந்த NFT-யை காட்சிக்கு வைத்திருக்கிறாராம்.