Published:Updated:

2021-ல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன டாப் 10 ஹேஷ்டேகுகள்!

டாப் 10 ஹேஷ்டேகுகள்
Listicle
டாப் 10 ஹேஷ்டேகுகள்

இந்த ஆண்டும் இந்திய அளவில் அதிகம் ட்ரெண்டான டாப் 10 ஹேண்டேக்குகளை பட்டியலிட்டிருக்கிறது ட்விட்டர்


இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ட்விட்டர் ட்ரெண்டிங்குக்கென தனி மதிப்பு இருக்கிறது. மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சில நேரங்களில் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் மூலமே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ட்விட்டர் ட்ரெண்டிங்கைப் பலரும் மக்களின் குரலாகவே பார்க்கிறார்கள் என்று கூடக் கூறலாம். ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் தான் நேசமணியை உலகமெங்கும் கொண்டு சேர்த்தது. வருடா வருடம் அதிகம் ட்ரெண்டான ஹேண்டேக் எது என்ற பட்டியலை ட்விட்டர் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்திய அளவில் அதிகம் ட்ரெண்டான டாப் 10 ஹேண்டேக்குகளை பட்டியலிட்டிருக்கிறது ட்விட்டர். அவை என்ன என்பதைப் பார்த்துவிடலாமா.


1
கோவிட் 19

#Covid 19

இந்த ஹேஸ்டேக்கைப் பற்றி அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது #கோவிட்19 பெருந்தொற்று. இன்னும் கோவிட் பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக வெளிவரவில்லை. முதல் அலையைச் சமாளித்து முடிப்பதற்குள் இரண்டாவது அலை, இரண்டாவது அலையைச் சமாளித்தால் கொரோனாவின் அடுத்த வெர்ஷன் என நம்மைப் பதற்றத்திலேயே வைத்திருந்தது இந்தப் பெருந்தொற்று. கொரோனா சிகிச்சைக்கான உதவிகளைக் கேட்பதற்காக இந்த ஹேஸ்டேக்கை மக்கள் அதிகம் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் சுமார் 1,800 ட்வீட்கள் பதிவாகும் அளவிற்குப் பிரபலமான ஒன்றாக இந்த ஆண்டு இருந்திருக்கிறது #Covid19.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
விவசாயிகள் போராட்டம்

#FarmersProtest

மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக 2020-ஆம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் ஓர் ஆண்டுக் கால போராட்டத்திற்கு இறுதியாக சில வாரங்களுக்கு முன்பு தீர்வு கிடைத்தது. பஞ்சாப் , ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியை முற்றுகையிட்டு முகாமிட்டுப் போராடி வந்தனர். விவசாயிகள் போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கான தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும், போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் ட்விட்டரை நாடினர். அதன் வாயிலாக இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் டாப் 10-ல் இடம் பிடித்திருக்கிறது #FarmersProtest

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
காபா வெற்றி

#TeamIndia

இந்த ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத்துறைக்கு ஒரு சிறப்பான ஆண்டு என்று தான் கூற வேண்டும். இந்த ஆண்டு பல வரலாறுகள் மாற்றியமைக்கப்பட்டது. புதிய வரலாறு எழுதப்பட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காபாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை இந்தியா வென்றதோடு தொடங்கியது இந்தியாவின் இந்த ஆண்டு விளையாட்டு அத்தியாயம். அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பதக்க வேட்டை என இந்த ஆண்டு விளையாட்டில் இந்தியாவுக்கு நிகழ்ந்ததெல்லாம் 'வாவ் மொமண்ட்ஸ்' தான். #TeamIndia


4
Tokyo2020

#Tokyo2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டேக்கியோ ஒலிம்பிகானது இந்த வருடம் நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் இந்தியாவுக்கு ஒரு ஸ்பெஷல் ஒலிம்பிக். 13 ஆண்டு கால தங்கப் பதக்கத்துக்கான தாகத்தைத் தணிக்கும் வகையில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா, அதோடு இதுவரை ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 6 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த இந்தியா இந்த முறை ஒரு தங்கத்தோடு 7 பதக்கங்களை வென்று அசத்தியது. பாராலிம்பிக்கில் அதிகபட்சமாக 4 பதக்கங்களை மட்டுமே வாங்கியிருந்தது இந்தியா. ஆனால், இந்தாண்டு முதல் முறையாக இரட்டை இலக்கத்தில் பதக்கங்களைப் பெற்று அசத்தினார்கள் இந்தியாவின் தங்கங்கள். பாராலிம்பிக்கில் தங்கம் மட்டும் 5. இவையெல்லாம் சேர்த்து டாப் 10 #Tokyo2020-க்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.


5
Ipl2021

#Ipl2021

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். கடந்த வருடம் கொரோனா காரணமாக அரபு நாடுகளில் நடைபெற்றது இதில் மும்பை அணி வெற்றி வாகை சூடியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சில கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவித்தது பிசிசிஐ. முதல் பாதி மட்டும் இந்தியாவில் நடைபெற, கொரோனா காரணமாக மீண்டும் அரபு நாடுகளில் பிற்பாதி போட்டிகளை நடத்தி முடித்தது இந்திய கிரிக்கெட் நிர்வாகம். இத்தொடரில் 'தல' தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கோப்பையைக் கைப்பற்றியது.


6
IndvEng

#IndVEng

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டம் குறித்த விவாதங்களால் ட்விட்டரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்,‌‌ இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து #IndVEng என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 2 இரண்டு வெற்றிகளும், இங்கிலாந்து ஒரு வெற்றியும் பெற ஒரு ஆட்டம் டிராவிலும் முடிந்தது. இறுதி ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்த ஆட்டத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் விளையாடவிருக்கின்றன இரு அணிகளும்.


7
தீபாவளி

#Diwali

இந்தியாவில் அதிகம் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்குகளில் வருடா வருடம் தவறாமல் இடம்பிடிக்கும் ஹேஷ்டேக் இது. தீபாவளி குறித்த பதிவுகள் ஒவ்வொரு வருடமும் அதிகளவில் இடம்பெறுகின்றன. பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறிய கடைகள் வரை அனைவருக்கும் தீபாவளி என்பது மிக முக்கியமான ஒரு பண்டிகை. தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த வருடமும் மக்கள் ட்விட்டரை நாட, டாப் 10-ல் இடம்பிடித்திருக்கிறது இந்த ஹேஷ்டேக்.


8
மாஸ்டர்

#Master

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மாஸ்டர் அதிக அளவில் ட்ரெண்டானது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியீட்டின் போது இரு நடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டரை அதகளமாக்குவது தற்போது அதிகரித்திருக்கிறது.


9
பிட்காயின்

#Bitcoin

சமீப காலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட வைரல் விஷயங்களுள் ஒன்று பிட்காயின். மற்ற இடங்களை விடவும், பிட்காயின் மற்றும் கிரிப்டோகரண்ஸி குறித்த உரையாடல்கள் அதிகம் நடைபெறுவது ட்விட்டரில் தான். சிலர் ட்விட்டரில் பதிவிடும் ட்வீட்கள் பிட்காயினின் மதிப்பையே குறைத்துவிடும். அந்தளவிற்கு பிட்காயினுக்கும் ட்விட்டருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்படியான நிலையில் பிட்காயின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. கிரிப்டோகரண்ஸியை அதிகம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் டாப் 10-ல் இருக்கிறது இந்தியா என்பது கொசுறுச் செய்தி.


10
BTS இசைக்குழு

#PermissionToDance

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. உலகமெங்கும் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை . உலகம் முழுவதும் பிரபலமான தென் கொரியாவைச் சேர்ந்த ஆண்கள் இசைக்குழு BTS. இந்த இசைக்குழுவானது தங்கள் வெளியிட்ட புதிய பாடலுக்கு நடனமாட அனுமதி வேண்டியது. இதனைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள தீவிர BTS பக்தர்கள் ட்விட்டரை அதகளமாக்கி இந்த ஹேஸ்டாகை பிரபலமடையச் செய்தனர். இது ஹேஷ்டேக் இந்தியாவிலும் டாப் 10 ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருப்பது BTS ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.