Published:Updated:

யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் - டாப் 3 இடங்களில் கலக்கிய சுட்டிகள்

யூடியூப்
யூடியூப்

ரியான்'ஸ் வேர்ல்ட் (Ryan's World) என்ற யூடியூப் சேனலுக்கு சொந்தக்காரரான 8 வயது சுட்டிப் பையன்தான் 26 மில்லியன் டாலர் சம்பளத்தோடு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஜூன் 1, 2018, முதல் ஜூன் 1, 2019 வரை யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ரியான்'ஸ் வேர்ல்ட் (Ryan's World) என்ற யூடியூப் சேனலுக்கு சொந்தக்காரரான 8 வயது சுட்டிப் பையன்தான் 26 மில்லியன் டாலர் சம்பளத்தோடு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். சென்ற வருடமும் 22 மில்லியனோடு இவர்தான் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதம் இவர் சேனலில் வெளியிட்ட `Huge eggs surprise toys challenge' என்ற வீடியோ 1.9 பில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டு, யூடியூபில் அதிகம் பேர்களால் பார்க்கப்பட்ட டாப் 50 பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ryan's world
ryan's world
youtube.fandom.com
வீடியோ பதிவேற்றும் விதிமுறைகளை மாற்றிய யூ-டியூப்... க்ரியேட்டர்கள் அறிய வேண்டியது என்ன? #YouTube

இதே பட்டியலில் 3 ஆம் இடத்தைப் பிடித்ததும் அனஸ்டாஸியா (Anastasia Radzinskaya) என்ற 5 வயது சுட்டிப் பெண்தான். இவரின் சேனலை 103 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறார்கள். உலகிலேயே பெரிய குழந்தைகளுக்கான சேனல் என்ற பெருமையும் இவருடைய சேனலான `லைக் நேஸ்ட்யா'வுக்கு உண்டு. யூடியூப் வீடியோஸ் மூலம் இவர் சம்பாதித்தது 18 மில்லியன் டாலர்கள்.

Like Nastya
Like Nastya
apkpure.com

இவை தவிர, Dude Perfect, Rhett and Link மற்றும் Jefree Star ஆகியோரின் சேனல்கள் முறையே 2, 4 மற்றும் 5ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. இவர்களுடைய வருமானங்கள் முறையே 20 மில்லியன், 17.5 மில்லியன் மற்றும் 17 மில்லியன் டாலர்கள் ஆகும்.

அடுத்த கட்டுரைக்கு