Published:Updated:

இந்தியாவில் அறிமுகமான ட்விட்டரின் `ஃப்ளீட்' வசதி... என்ன சொல்கிறார்கள் ட்விட்டர்கள்!

ட்விட்டர் ஃபிளீட்
ட்விட்டர் ஃபிளீட்

லைக், ரீட்வீட், ரிப்ளை இல்லாமல் 24 மணிநேரத்தில் தானாகவே அழிந்துவிடும்படி ட்விட்டரிலும் பதிவுகளிட முடியமா... என்ற மக்களின் பல நாள் கேள்விக்கான விடைதான் இந்த 'ஃப்ளீட்' என்கிறது ட்விட்டர்.

ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப்பைத் தொடர்ந்து, ஸ்டோரி ஆப்ஷனை ட்விட்டரும் கொண்டுவந்திருக்கிறது. இதை 'ஃப்ளீட் (Fleet)' என்று அழைக்கிறது ட்விட்டர். இந்த ஸ்டோரி பதிவிடும் வசதியை இப்போது இந்திய ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்கள் மொபைல் ஆப்பில் பயன்படுத்தலாம். இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ட்விட்டர் ஃபிளீட்
ட்விட்டர் ஃபிளீட்

இந்த ஃப்ளீட் வசதியானது அப்படியே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது போன்றதே. இதை சர்ச் பாரில் தேடவோ, 3-ம் தரப்பு செயலிகள் கண்காணிக்கவோ முடியாது. ட்விட்டரில் அனைவருக்கும் இந்த 'ஃப்ளீட்' காட்டப்படாது. அந்தப் பயனாளியின் கணக்கில் நுழைந்தால் காணலாம் அல்லது இன்ஸ்டாகிராம் போல அவர்களைப் பின்தொடருபவரின் முகப்பு பக்கத்தில் மேலே இந்த ஃப்ளீட்கள் அடுக்கப்பட்டிருக்கும்.

லைக், ரீட்வீட், ரிப்ளை இல்லாமல் 24 மணிநேரத்தில் தானாகவே அழிந்துவிடும்படி ட்விட்டரிலும் பதிவுகளிட முடியமா... என்ற மக்களின் பல நாள் கேள்விக்கான விடைதான் இந்த 'ஃப்ளீட்' என்கிறது ட்விட்டர்.

ட்விட்டருக்கு இந்தியா எப்போதுமே முக்கியமானது. உலகளவில் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பயனாளர்கள் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. இந்த ஃப்ளீட் வசதியைப் பயன்படுத்தும் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி
ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி
Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர்
Pinterest

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி நம்ம கமல்ஹாசன் வரை பெரும்பாலான அரசியல் பிரமுகர்களும் பிரபலங்களும் ட்விட்டரில் கருத்து சொல்லவே விரும்புகின்றனர். தங்களுடைய கருத்துகளை நேரடியாக ட்விட்டரில் பதிவிடுகின்றனர். அவர்கள் எல்லாம் இந்த வசதியை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய ட்விட்டர் பயனாளர்கள் நேற்றே இந்த வசதியைப் பயன்படுத்தி அதுகுறித்து கருத்துகள் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். 'இப்படியே போனால் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வித்தியாசமே இருக்காது'. 'ட்விட்டர் தனித்துவம் மிஸ் ஆகாது பாஸ்', 'சூப்பர் வசதி ஃபிரெண்ட்' எனப் பல கருத்துகள்.

இந்தப் புதிய வசதி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு