Published:Updated:

தொடங்குகிறதா மூன்றாம் உலகப் போர்..? - ட்விட்டரைத் தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!

ஒபாமா எடுக்கத் தயங்கிய முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த முடிவு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் எனப் பத்திரிகைகள் கூறி வருகின்றன.

world war 3
world war 3

இன்னும் புத்தாண்டுக் கொண்டாட்டம் கூட முடியவில்லை, அதற்குள் மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகி விட்டது அமெரிக்கா. உலகப்போரா? எனப் பதற்றப்பட வேண்டாம். கடந்த சில மணி நேரங்களாகவே அப்படித்தான் ட்வீட் செய்து ட்விட்டரையே அதகளமாக்கிக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

Trump
Trump

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே கடந்த சில நாள்களாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. அதில் இரானின் ராணுவத் தளபதி கசோம் சுலைமானி கொல்லப்பட்டார். இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்கத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஒபாமா எடுக்கத் தயங்கிய முடிவை ட்ரம்ப் எடுத்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த முடிவு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் எனப் பத்திரிகைகள் கூறி வருகின்றன.

`ட்ரம்ப் சொன்னபடியே செய்தோம்!’- இரானின் முக்கியத்  தலைவரைக் கொன்ற அமெரிக்கா
world war 3
world war 3

இதையே கன்டன்ட் ஆக எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள், மூன்றாம் உலகப் போர் குறித்த காமெடி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்களால் ட்விட்டரைத் தெறிக்கவிட்டனர். கடந்த சில மணி நேரங்களாக டாப் ட்ரெண்டிங்கில் மூன்றாம் உலகப் போர் (#Worldwar3) தான் இருந்து வருகிறது. உலகப்போர் மூண்டால் மக்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம், யார் யாரெல்லாம் உலகப் போரில் கலந்து கொள்வார்கள் என உலக நாடுகள் அனைத்தையும் வம்பிழுத்து கலாய்த்து வருகின்றனர் ட்விட்டர்வாசிகள். இவர்களால் உலகப் போர் வராமல் இருந்தால் சரி என்றுதான் தோன்றுகிறது.