Published:Updated:

"இப்படி ட்வீட் போட்டா 150% அதிக என்கேஜ்மென்ட் கிடைக்கும்!" - ட்விட்டர் சொல்லும் டேட்டா

Twitter
Twitter ( Pixabay )

ட்விட்டரில் வீடியோக்களுடன் செய்யப்படும் ட்வீட் மற்ற ட்வீட்களைவிட 10 மடங்கு அதிகமான என்கேஜ்மென்ட் பெறுவதாகச் சொல்கிறது ட்விட்டர். அதே போல புகைப்படங்களுடன் செய்யப்படும் ட்வீட், புகைப்படங்கள் இல்லாத ட்வீட்களைவிட 150 மடங்கு அதிக ரீட்வீட் செய்யப்படுகின்றன.

Facebook is a place where friends become strangers. Twitter is a place where strangers become friends.
Vikatan

உலகின் மிக முக்கியமான இரண்டு சமூக வலைதளங்கள் ஹிட்டாக ஆரம்பித்த புதிதில் சொல்லப்பட்ட ஸ்டேட்மென்ட் இது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் புகைப்படங்களுக்குத்தான் அதிக லைக்ஸ் கிடைக்கும். எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதினாலும் அதைவிட அதிக லைக்ஸ் கிடைக்காது. ஆனால், ட்விட்டரில் அப்படியே தலைகீழ். ட்விட்டர்வாசிகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைவிட எழுத்தாலான ட்வீட்களுக்கு நல்ல வரவேற்பு தருவார்கள். இப்போதாவது, ட்விட்டரில் 280 கேரக்டர்கள் எழுதலாம். அப்போது வெறும் 140. அதில் யார் சுவாரஸ்யமாக எழுதுகிறார்களோ அவர்களுக்குத்தான் ரீட்வீட்.

இன்று எல்லாம் மாறிவிட்டது எனச் சொல்லியிருக்கிறது ட்விட்டர். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் மாற்றம் உண்மை என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இன்று, ட்விட்டரில் வீடியோக்களுடன் செய்யப்படும் ட்வீட் மற்ற ட்வீட்களைவிட 10 மடங்கு அதிகமான என்கேஜ்மென்ட் பெறுவதாகச் சொல்கிறது ட்விட்டர். அதே போல புகைப்படங்களுடன் செய்யப்படும் ட்வீட், புகைப்படங்கள் இல்லாத ட்வீட்களைவிட 150 மடங்கு அதிக ரீட்வீட் செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் ட்விட்டரே தரும் GIF-யைவாது சேர்க்க வேண்டும் போலிருக்கிறது. ஏனெனில், GIF ட்வீட்கள் மற்ற ட்வீட்களைவிட 55% அதிக என்கேஜ்மென்ட்களைத் தருகின்றன.

Twitter
Twitter

இன்னும் லைவ் வீடியோ உள்ளிட்ட நிறைய வழிகள் ட்விட்டரில் உள்ளன. ஏதேனும் ஒரு மீடியா சேர்த்தால் நம் ட்வீட் அதிக பேரைச் சென்றடையும் என்பதுதான் இதன் அடிப்படை செய்தி. வெறும் எழுத்துகள் மட்டுமே இனி சுவாரஸ்யம் தந்துவிடாது என்ற நிலைக்கு வந்திருக்கிறது ட்விட்டர்.

இந்த மாற்றத்தை ட்விட்டர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

தமிழில் அதிகம் ட்வீட் செய்யும் திருமாறன் அவர்களிடம் கேட்டேன். "உண்மைதான். இப்போலாம் புகைப்படமோ அல்லது GIF இல்லாத ரிப்ளையே பார்க்க முடியறதில்லை. உண்மைல அதெல்லாம் அந்த உரையாடலை ஜாலியா மாத்த யூஸ் ஆகுது. நாம சொல்ல வர்றத டைப் செய்றதைவிட அதுக்கேத்த படமா போடுறது ஈஸி. ஃபோட்டோஸ் எல்லாம் பவர்பாயின்ட் மாதிரி. நாம 5 நிமிஷம் பேசி சொல்ல வர்றத பவர்பாயின்ட்டோட ஒரு ஸ்லைடு சொல்லிடுமில்லையா? அந்த மாதிரிதான் ஃபோட்டோ கமென்ட்ஸும். சரியான படத்தை ரிப்ளை பண்ணா அதை ரசிக்கிறவங்களும் அதிகம். இப்போலாம் யாருக்கு ரிப்ளை போடுறதுனாலும் என் கை தானா கேலரில இருக்கிற ஒரு ஃபோட்டோவைதான் தேடுது. அதுவே பழகிப்போறதால புகைப்படங்கள் இருக்கிற ட்வீட்ஸ அதிகம் ரசிக்கிறேன்." என்றார்.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?

இந்தப் புகைப்படங்களைத் தேர்தெடுப்பதிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. ஹிட் அடிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள், யூடியூப் வீடியோக்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என இந்த கேலரி அப்டேட் ஆகிக்கொண்டேயிருக்கிறது. அடிக்கடி இவை மாறுவதால் போர் அடிப்பதும் இல்லை.

"எனக்கு எழுத வராது. ஆனா டைமிங்கான படங்கள் எடுக்கிறதுல கில்லாடி. ட்விட்டர்ல மட்டுமில்ல... எங்க ஃபேமிலி வாட்ஸ் அப் க்ரூப்புல இருந்து ஆபீஸ் க்ரூப் வரைக்கும் நான் போடுற டைமிங் படங்களுக்கு செம ரெஸ்பான்ஸ். என் ஃபோன்ல மட்டும் இந்த மாதிரியான ஃபோட்டோக்கள் 1000க்கு மேல இருக்கு. ஒவ்வொரு எமோஷனுக்கும் ஏத்த மாதிரி அதையெல்லாம் தனி ஃபோல்டர்ல போட்டு வச்சிருக்கேன். ஆரம்பத்துல நான் மட்டும்தான் இப்படி ரிப்ளை பண்ணிட்டிருந்த மாதிரி தோணிருக்கு. ஆனா, இப்ப எல்லோருமே ஃபோட்டோ கமென்ட்ஸ்தான் போடுறாங்க. ஜாலியாதான இருக்கு" என்கிறார் ரமேஷ்.

twitter
twitter

வீடியோக்களும் புகைப்படங்களும் ஜிஃப்களும் தான் இன்றைய சமூக வலைதளத்தின் சுவாரஸ்யங்கள். தனி நபர்கள் மட்டுமன்றி நிறுவனங்களும் இதே ஃபார்முலாவில்தான் ட்வீட் செய்கிறார்கள். உங்கள் ட்வீட் நிறைய பேரைச் சென்றடைய விரும்பினால் நீங்களும் பொருத்தமான புகைப்படத்தை இனிச் சேர்த்துவிடுங்கள்.

ஹேப்பி ட்வீட்டிங்!

பின் செல்ல