Published:Updated:

பட்ஜெட் 2022-ல் குறிப்பிடப்பட்ட இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இ-பாஸ்போர்ட்

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இ-பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இ-பாஸ்போர்ட்டில் உள்ள பயோமெட்ரிக் பதிவு, பயணிகள் விமான நிலையங்களில் இமிக்ரேஷனை எளிதாகக் கடக்க உதவும்.

பட்ஜெட் 2022-ல் குறிப்பிடப்பட்ட இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இ-பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இ-பாஸ்போர்ட்டில் உள்ள பயோமெட்ரிக் பதிவு, பயணிகள் விமான நிலையங்களில் இமிக்ரேஷனை எளிதாகக் கடக்க உதவும்.

Published:Updated:
இ-பாஸ்போர்ட்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது "இந்தியர்கள் 2022-2023க்குள் இ-பாஸ்போர்ட் பெறுவார்கள்" என்று அறிவித்தார். இ-பாஸ்போர்ட் சாதாரண பாஸ்போர்ட் வடிவிலேயேதான் இருக்கும். ஆனால், இதன் சிறப்பம்சம் பாஸ்போர்ட்டில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருக்கும்.

இ-பாஸ்போர்ட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோசிப்பில் முக்கிய பாதுகாப்பு தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் பட்டாச்சாரியா ட்விட்டரில் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய பாஸ்போர்ட்டுகளை இந்தியர்கள் விரைவில் பெறுவார்கள் என்று அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் இ-பாஸ்போர்ட்டுகள் International Civil Aviation Organization (ICAO) விதிகளின்படி அச்சடிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இ-பாஸ்போர்ட்
இ-பாஸ்போர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியர்கள் தற்போது வரை அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இ-பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இ-பாஸ்போர்ட்டில் உள்ள பயோமெட்ரிக் பதிவு, பயணிகள் விமான நிலையங்களில் இமிக்ரேஷனை எளிதாகக் கடக்க உதவும். இந்த இ-பாஸ்போர்ட்டுகள் நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் தயாரிக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் எனப்படுவது சாதாரண பாஸ்போர்ட் போலவேதான். இதில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதால் சாதாரண பாஸ்போர்ட்டை விட இ-பாஸ்போர்ட் மிகவும் பாதுகாப்பானது. எலக்ட்ரானிக் மைக்ரோ சிப்பில் பாஸ்போர்ட்டில் அச்சிடப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதாவது பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள். ATM கார்டுகளில் மைக்ரோ சிப் இருப்பது போலத்தான் இதுவும். இமிக்ரேஷன் கவுன்டரில் இ- பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் சில விநாடிகளிலேயே சோதனையை முடித்துவிடலாம். எனவே நீண்ட வரிசையை நீக்கும். மைக்ரோசிப்பைத் தயாரிப்பது கடினம் என்பதால் போலி பாஸ்போர்ட்டுகளைக் கட்டுப்படுத்த உதவும்.

இ-பாஸ்போர்ட்
இ-பாஸ்போர்ட்

இ-பாஸ்போர்ட்டின் சிறப்பம்சங்கள்:

இ-பாஸ்போர்ட்டில் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப் 64 கிலோ பைட் சேமிப்பு இடம் கொண்டிருக்கலாம். இந்த சிப்பில் தொடக்கம் முதல் 30 சர்வதேச பயணங்கள் வரையிலான பதிவுகள் உள்ளடங்கியிருக்கும். மேலும் பயணியின் கைரேகைகள் மற்றும் படத்தை இந்த சிப் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ சிப்பை சேதப்படுத்த முயன்றால் பாஸ்போர்ட் அங்கீகாரம் தோல்வியடையும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இ-பாஸ்போர்ட் இதுவரை கிட்டத்தட்ட 120 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism