மெட்டா குழுமத்தைச் சேர்ந்த வாட்ஸ்அப் செயலியை, மொபைல் போனில் மட்டுமில்லாது கணினியில் டெஸ்க்டாப் வெர்சனாகவும் பிரவுஸரில் வாட்ஸ்அப் வெப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு வாட்ஸ்அப் எண் பயன்படுத்தப்படும் முதன்மை மொபைலில் டேட்டா ஆன் செய்திருப்பது அவசியமாக இருந்தது. செப்டம்பரில் வெளியான வாட்ஸ்அப் அப்டேட்டில் முதன்மை கைபேசி இயங்காத நிலையிலும் வாட்ஸ்அப் வெப் வசதியைப் பயன்படுத்த மல்டி-டிவைஸ் பீட்டா என்கிற தேர்வு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்சன்களுக்கு பயனரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 'இரட்டை சரிபார்ப்பு' (Two Step Verification) வசதிக்கான அப்டேட் வரலாம் எனத் தெரிகிறது.

இந்த வசதி ஏற்கனவே ஆண்ட்ராய்ட் மற்றும் iOS மொபைலில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆறு இலக்க PIN நம்பர் மூலம் வாட்ஸ்அப்பில் லாகின் செய்யமுடியும்.
PIN நம்பர் மறந்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிற மெயில் ஐடி வழியாக மீட்டுக் கொள்ளலாம். இந்த வசதியை தேவைப்படும் போது அமைத்துக் கொள்ள Enable/Disable ஆப்சன்களும் வழங்கப்படும்.
பயனர் மொபைல் போன் தொலைந்தாலோ PIN நம்பர் மறக்க நேர்ந்தாலோ இந்த வசதி, வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும்.