Published:Updated:

வீட்டில் இருக்கும் குழந்தைகளின் நேரத்தை  ஜாலியாகக் கழிக்க உதவும்  `ஆப்ஸ்'!  #Corona

குழந்தைகள்
குழந்தைகள்

குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளைத் தரக்கூடிய சில செயலிகளைப் பார்க்கலாம். நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பயனுள்ளவையாக இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் சோசியல் டிஸ்டன்சிங் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கும் இரண்டு வாரத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில், குழந்தைகள் அதிகம் மொபைல் பார்க்கக் கூடாது என்று வெளியே சென்று விளையாட அறிவுறுத்துவோம். இந்த முறை அப்படிச் செய்ய முடியாது. வீட்டிற்குள்ளேயே வைத்துதான் என்டர்டெய்ன் செய்ய வேண்டும். குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து என்டர்டெய்ன்மென்ட் செய்வது சிரமமான காரியம்தான். நாம் மொபைலை 24 மணி நேரம் பயன்படுத்திக்கொண்டே, நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளிடம் மொபைல் பார்க்கக் கூடாது எனக் கூற முடியாது. ஆனால், அவர்களும் மொபைல் பயன்படுத்தும் காரணியை நம்மால் மாற்ற முடியும். நாம் பார்க்கக் கூடிய கன்டன்டேதான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். எனவே, அவற்றிலிருந்து மாற்றி குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளைத் தரக்கூடிய சில செயலிகளைப் பார்க்கலாம். நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பயனுள்ளவையாக இருக்கும்.

Brain pop
Brain pop

ப்ரைன் பாப் (Brain Pop):

இந்தச் செயலியின் அளவு வெறும் 4 MB தான். ஆனால், இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் சிறப்பாக உள்ளது. அறிவியல், கணிதம், ஆங்கிலம் என இன்ஜினீயரிங் வரை கார்ட்டூன் வடிவிலேயே குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வகையில் பல காணொளிகள் இந்தச் செயலியில் கிடைக்கின்றன. எல்லாக் காணொளிகளையும் பார்க்க பணம் கட்ட வேண்டும். ஆனால், இலவசமாகவும் பல காணொளிகளைப் பார்த்துக்கொள்ளலாம். புரிந்துகொள்ள கடினமான தகவல்களைக்கூட குழந்தைகளுக்கு புரியும்படி எளிமையாக கார்ட்டூன் வடிவில் கொடுக்கிறது இந்தச் செயலி. உதாரணமாக, அறிவியல் பிரிவில் DNA , செவ்வாய்க்கிரகம் பற்றிய காணொளிகள். சமூக அறிவியலில், மார்கோ போலோ, சமூக நெறிகள் உள்ளிட்டவை பற்றிய காணொளிகள் என, குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வழங்குகிறது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

செயலி: https://play.google.com/store/apps/details?id=com.brainpop.brainpopfeaturedmovieandroid&hl=en_IN

யூடியூப் கிட்ஸ் (youtube Kids):

Youtube kids
Youtube kids

யூடியூபில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நாம் பார்க்கும் சாதாரண காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. நாம் அருகில் இல்லாதபோது அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை நாம் கண்காணிக்க முடியாமல் போகிறது. இதற்குத் தீர்வாக யூடியூப் கிட்ஸ் செயலியை உபயோகிக்லாம். இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை நாமே செட் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும். மீண்டும் பாஸ்வேர்டு போட்டால்தான் திறக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காணொளிகள், குழந்தைகள் பார்க்கும் வண்ணம் மட்டும் இருந்தால் போதுமா... இல்லை கற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டுமா என்பதைப் பொறுத்தும் காணெளிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

செயலி: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.youtube.kids&hl=en_IN

Nasa Visualization Explorer
Nasa Visualization Explorer

நாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர் (Nasa Visualization Explorer):

குழந்தைகளுக்கு ஃபேன்டஸி கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்தானே. என்ன நம்மிடம்தான் சொல்வதற்கு போதுமான கதைகள் இல்லை. நாசாவின் இந்தச் செயலியில் பூமியில் நிகழம் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக் கோள் எரிந்து விட்டது, எப்படிப் பாதிப்பு இல்லாமல் தகவல்ளைச் சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி. சரி, இதை எப்படிக் குழந்தைகள் பார்க்க முடியும். இந்தச் செயலியில் தகவல்களுடன் சேர்த்து அனிமேஷன் காணொளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காணொளிகளைக் காட்டிக் கொண்டே அதில் படித்த தகவல்களைக் கொண்டு ஒரு சூப்பர் பேன்டஸி கதையை உங்களால் சொல்ல முடியாதா என்ன.

செயலி: https://play.google.com/store/apps/details?id=gov.nasa.gsfc.nasavizprod&hl=en_IN

'தனி வாட்ஸ்அப் எண்.. குழந்தைகள் காமிக்ஸ்!' -முடுக்கிவிடப்படும் கொரோனா விழிப்புணர்வு முயற்சிகள்

கான் அகாடமி கிட்ஸ் (Khan Academy Kid):

Khan Academy Kids
Khan Academy Kids

பிரபலமான கற்றல் செயலியான 'கான் அகாடமி'யின் குழந்தைகளுக்கான செயலி கான் அகாடமி கிட்ஸ். இந்தச் செயலியைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், அடிப்படை ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகள் கிடைக்கும். காணொளிகள் வேண்டாம் என்றாலும் நாமே கற்றுக்கொடுக்கலாம். அதற்கு ஏற்ற வகையில் புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியைத் தாண்டி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் ஏராளமாக இருக்கின்றன. நாம் குழந்தைகளுக்கு முக்கியமாகக் கற்றுக்கொடுக்க வேண்டியதும் அதுவே.

செயலி: https://play.google.com/store/apps/details?id=org.khankids.android&hl=en_IN

டைனி கார்ட்ஸ் (Tiny Cards):

Tiny Cards
Tiny Cards

புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான செயலியான டுயோ லிங்கோவின் (Duo lingo) குழந்தைகளுக்கான செயலி டைனி கார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். இந்தச் செயலியின் சிறப்பம்சமே, இது இண்டராக்டிவ் ஆக இருப்பதே. குழந்தைகள் வெறுமனே திரையைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகள், எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் எனக் கற்றுக்கொள்வதை மறக்காமல் இருக்க குழந்தைகளை என்கேஜ்டாக வைத்திருப்பதுதான். பார்ப்பது மட்டுமல்ல குழந்தைகள் கேள்வி வழி கற்றுக்கொள்ள பாட்கேஸ்ட்களும் உண்டு. வெறும் சில டாப்பிக்குள் மட்டும் என்று இல்லாமல் வெரைட்டியாக ஜாலியாகக் கற்றுக்கொடுப்பது இதன் ப்ளஸ் பாய்ன்ட். உபயோகித்துப் பாருங்கள். குழந்தைகள் மட்டுமல்ல, நீங்களும் இந்தச் செயலியை விரும்பத் தொடங்கி விடுவீர்கள்.

செயலி: https://play.google.com/store/apps/details?id=com.duolingo.tinycards&hl=en=com.duolingo.tinycards&hl=en

ஹவ் டு மேக் ஓரிகாமி (How to make Origami):

மொபைல் பார்த்து என்டர்டெய்ன் பண்ணுவது மட்டுமே ஒரே வழியா... என அலுத்துக்கொண்ட பெற்றோர்களுக்கு. குழந்தைகளுடன் சேர்ந்து ஆக்டிவிடியில் ஈடுபடத் தயாராகுங்கள். சிறு வயதில் கத்திக் கப்பல் செய்யாத பெற்றோர்கள் இங்கு உண்டா. பேப்பரில் செய்யும் பொம்மைகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகம். பேப்பரில் செய்யும் இந்தக் கலைக்கு ஓரிகாமி எனப் பெயர். இதன் கலையின் சிறப்பம்சமே தாம் விளையாடும் பொம்மைகளை நாமே பேப்பரில் செய்துகொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாதுதான். அதற்காகவே இருக்கிறது இந்தச் செயலி. ஹவ் டு மேக் ஓரிகாமி. இந்தச் செயலியில் விதவிதமான பொம்மைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழிமுறை இருக்கும். குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் செய்தால் உங்களுக்கும் சற்று ரிலாக்ஸ்டாக இருக்கும்.

செயலி: https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigami&hl=en_IN

origami
origami

குழந்தைகள் கையில் மொபைலைக் கொடுத்துவிட்டால் அவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்தான். ஆனால், அது மட்டுமே உலகம் என்று எண்ணிவிடக் கூடாது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அதைத் தள்ளி வைத்துவிட்டு குழைந்தைகளுக்காக நேரம் செலவழிக்கலாம். குழந்தைகளுக்கு என்ன தெரியப்போகிறது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இன்று நீங்கள் அவர்ளுடன் செலவு செய்யும் நேரம்தான் பின்னாளில் அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்பதை முடிவு செய்கிறது. குழந்தைகள் முக்கியம்.

அடுத்த கட்டுரைக்கு