Published:Updated:

'தமிழ்நெட்'... அரசின் அதிவேக இணையதள சேவையால் மக்களுக்கு என்ன நன்மை?''

ஏழைக் குழந்தைகள் எளிமையாக கல்வி கற்க இந்த இணைய சேவைத் திட்டம் உதவி செய்யும்.

நெட்
நெட்

தமிழகத்தின் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து மக்களையும் இணைக்க வருகிறது 'தமிழ்நெட்' என்னும் தமிழக அரசின் அதிவேக இணையதள சேவை. ஏற்கெனவே, நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய வசதியை அளிக்கும் 'பாரத்நெட்' திட்டத்தின் நீட்சிதான் இது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 1,815 கோடி ரூபாயை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2p0H0ry

இந்தத் திட்டப்படி தமிழகத்தில் 55,000 கி.மீ தொலைவுக்கு 'ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்' இணைப்பு கொடுக்கப்படும். அதன்மூலம், 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களுடன் இணைக்கப்படும். தற்போது, அரசு அலுவலக இணையதள சேவைகளின் பிரச்னையே, இணையதள வேகக் குறைபாடுதான். ஆனால், இந்தத் திட்டத்தில் ஒரு ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இணையதள சேவை கிடைக்கும் என்கிறார்கள். இந்தத் திட்டத்துக்காக 'தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக இயக்குநராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு இருக்கிறார். அவரிடம் இந்தத் திட்டம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

இதன்மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். வீட்டில் இருந்தபடியே வேலை மற்றும் பிற விஷயங்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கவும் முடியும்.

''அரசு மற்றும் தனியார் துறை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப்போகிறதா?''

''தற்போதைக்கு தமிழக அரசு மட்டும்தான் செயல்படுத்தும்.''

''இதனால், மக்களுக்கு நேரடியாக என்ன நன்மை?''

''ஏற்கெனவே தமிழக அரசின் சார்பாக 37 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்பெறுவர். இப்போது, 'ஸ்மார்ட்போன்' இல்லாத வீடுகளே கிடையாது. அதனால், மக்கள் இந்த இணைய சேவையைப் பயன்படுத்துவது எளிது. இ-சேவையின்மூலம் அரசுச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம். அலுவலகங் களில் காத்திருக்கத் தேவையில்லை. இடைத்தரகர் தேவையில்லை. குளறுபடிகளுக்கு வழியில்லை. பயணச் செலவு, நேர விரயம் மிச்சம். ஏழை மக்களின் பொருளாதாரம் காக்கப்படும்.

ஏழைக் குழந்தைகள் எளிமையாக கல்வி கற்க இந்த இணைய சேவைத் திட்டம் உதவி செய்யும். நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் அதே வேகத்தில், இனி கிராமப்புற மாணவர்களுக்கும் இணைய வசதி கிடைக்கும். இதன்மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். வீட்டில் இருந்தபடியே வேலை மற்றும் பிற விஷயங்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கவும் முடியும்.

'தமிழ்நெட்'... அரசின் அதிவேக இணையதள சேவையால் மக்களுக்கு என்ன நன்மை?''

முக்கியமாக, கிராமப்புற தொழில்முனைவோர்களை இந்த இணைய சேவை அதிகப்படுத்தும். அத்துடன், அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சரியாகப் போய்ச் சேர இந்த இணைய சேவை நிச்சயம் உதவி செய்யும். இந்தத் திட்டத்தின்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 60,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன.''

> ''பாரத்நெட் திட்டத்துக்கும், தமிழ்நெட் திட்டத்துக்கும் என்ன வேறுபாடு?'' "திட்டம் செயல்பட எவ்வளவு நாள் ஆகும்?" உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு அளித்த பதில்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க https://www.vikatan.com/technology/tech-news/5g-the-internet-revolution-in-tamil-nadu

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |