Published:Updated:

18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட விர்ச்சுவல் நிலம் - அங்கே அப்படி என்ன இருக்கிறது? | Metaverse

Decentraland
News
Decentraland

டீசென்ட்ராலேண்டில் வாங்கியிருக்கும் இந்த இடத்தை விர்ச்சுவல் ஆடைகள் மற்றும் பொருட்களை விற்பதற்கும், டிஜிட்டல் பேஷன் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

விர்ச்சுவல் உலகில் நிலம் ஒன்றை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய்) வாங்கியிருக்கிறார் கிரிப்டோ பயனர் ஒருவர். கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான 'Tokens.com' நிறுவனம்தான் இதனை வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனமானது கிரிப்டோவில் அதிகப்படியான முதலீடுகளைச் செய்து வரும் ஒரு நிறுவனம். சரி, விர்ச்சுவல் நிலமா, அது என்ன, அதனை எப்படி வாங்க முடியும் எனக் குழப்பங்கள் பல எழுகின்றனவா?
விற்பனையில் இருக்கும் டீசென்ட்ராலேண்டு நிலம் (NFT வடிவில்)
விற்பனையில் இருக்கும் டீசென்ட்ராலேண்டு நிலம் (NFT வடிவில்)

இந்தக் குழப்பங்களுக்கு ஒரே விடையாக 'மெட்டாவெர்ஸ்' எனப் பதிலளிக்கிறது டீசென்ட்ராலேண்டு (Decentraland). கடந்த மாதம் முதலே மார்க் சக்கர்பெர்க் மெட்டாவெர்ஸை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் எனச் செய்திகளில் படித்தது நினைவிருக்கலாம். மெட்டாவெர்ஸ் என்பது தனிப்பட்ட ஒரு நபருக்குச் சொந்தமானது அல்ல. அது ஒரு யோசனை, அவ்வளவு தான். மெட்டாவெர்ஸை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம், எப்படி வேண்டுமானாலும் அவரவர் கற்பனைக் குதிரையைத் தட்டி விடலாம். டீசென்ட்ராலேண்டு என்பது ஒரு தனி விர்ச்சுவல் கேமிங் உலகம் (ரோபோலக்ஸ், மைன்கிராஃப்ட் போல டீசென்ட்ராலேண்டு என்பதும் ஒரு தனி விர்ச்சுவல் உலகம்). நம்மைப் போன்ற பல பேர் தங்களுடைய டிஜிட்டல் அவதார் (டீசென்ட்ராலேண்டில் நம்முடைய உடல் என்று வைத்துக் கொள்ளலாம்) கொண்டு அங்கு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்ந்து வருகிறார்களா, என ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கும் அந்த மெட்டாவெர்ஸ் உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசை இருந்தால் இங்கே கிளிக் செய்து டீசென்ட்ராலேண்டில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்கள்.
டீசென்ட்ராலேண்டு வரைபடம்
டீசென்ட்ராலேண்டு வரைபடம்

நிஜ உலகில் வாழும் மனிதர்கள் கணினியின் மூலம் உள்நுழைந்து தங்கள் அவதார்களைக் கொண்டு டீசென்ட்ராலேண்டில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் பேசலாம், அந்த இடத்தில் பொழுதுபோக்கப் பல விளையாட்டு அரங்குகள் இருக்கும். அங்கு விளையாடலாம், ஷாப்பிங் செய்யலாம். இந்தியாவில் நாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் ரூபாய் நோட்டைக் கொடுத்து வேண்டியவற்றை வாங்குவோம் இல்லையா. அது போல டீசென்ட்ராலேண்டில் ஒரு பொருளை (NFT) வாங்க வேண்டும் என்றால் மானா (MANA) என்ற கரண்ஸியை நம் வாலட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கான வாலட் வசதியையும் நமக்குத் தருகிறது டீசென்ட்ராலேண்டு. மானா என்பது எத்திரியமை அடிப்படையாகக் கொண்டு டீசென்ட்ராலேண்டில் மட்டுமே உபயோகப்படக்கூடிய ஒரு கிரிப்டோகரண்ஸி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த உலகத்தில் என்ன ஷாப்பிங் செய்வது? நம்முடைய அவதார் ஒன்று அங்கு இருக்குமல்லவா, அதற்கு ட்ரஸ் வாங்கலாம், ஷூ வாங்கலாம், கண்கண்ணாடி வாங்கலாம் இல்லையென்றால் நிலம் கூட வாங்கலாம். அப்படித்தான் டீசென்ட்ராலேண்டில் நிலம் ஒன்றை NFT வடிவில் வாங்கியிருக்கிறது டோக்கன்ஸ்.காம் (Tokens.com) நிறுவனம். டீசென்ட்ராலேண்டில் நீங்கள் பார்ப்பவற்றை நம்மைப் போல யாரோ ஒரு பயனர் வாங்கியிருப்பார். நாம் வாங்கிய நிலத்தில் நம்முடைய கான்சர்ட்டை நடத்தலாம், கட்டடங்களைக் கட்டலாம், நாம் உருவாக்கிய அல்லது வாங்கிய NFT-க்களை விற்பனை செய்யலாம். இப்படி எவ்வளவோ செய்யலாம் எனச் சிலாகிக்கிறார்கள் டீசென்ட்ராலேண்டில் வாழும் NFT ஆர்வலர்கள்.

Decentraland
Decentraland

டீசென்ட்ராலேண்டில் NFT வடிவில் நிலத்தை வாங்கியிருக்கும் இந்த டோக்கன்ஸ்.காம் நிறுவனமானது கிரிப்டோ சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்துவரும் முதலீட்டு நிறுவனம். டீசென்ட்ராலேண்டில் வாங்கியிருக்கும் இந்த இடத்தை விர்ச்சுவல் ஆடைகள் மற்றும் பொருள்களை விற்பதற்கும், டிஜிட்டல் பேஷன் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

டீசென்ட்ராலேண்டில் பயன்படுத்தப்படும் 'மானா'வானது மிகவும் நிலையில்லாமல் இருக்கிறது. மானா மட்டுமின்றி கிரிப்டோகரஸிகள் எல்லாமே நிலையில்லாத் தன்மையுடன்தான் இருக்கின்றன. எனவே, கிரிப்டோவுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அதில் முதலீடு செய்ய வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.