Published:Updated:

ஸ்மார்ட் போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை முந்திய விவோ!

smart phones
smart phones ( New atlas )

எப்போதும் இல்லாத வகையில் ஸ்மார்ட் போன் சந்தையில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போன் நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தை என்பது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் இதுவரை ஷாவ்மி நிறுவனம் முதல் இடத்தையும், சாம்சங் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் இருந்து வந்தன. 2019-ம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான சந்தை நிலவரத்தை Counterpoint Research நிறுவனம் வெளியிட்டுள்ளது.

vivo
vivo
android authority

அந்த அறிக்கையின்படி 27 சதவிகிதச் சந்தைப் பங்குகளுடன் ஷாவ்மி நிறுவனம் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. ஆனால், 19 சதவிகிதச் சந்தைப் பங்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள சாம்சங்கைப் பின்னுக்குத் தள்ளி 21 சதவிகித சந்தைப் பங்குகளுடன் விவோ நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களையும் 12 சதவிகிதம் மற்றும் 8 சதவிகித சந்தைப் பங்குகளுடன் ஓப்போ நிறுவனமும் ரியல்மீ நிறுவனமும் பிடித்துள்ளன.

Vikatan

சாம்சங் நிறுவனத்திற்கு 2019 ஆம் ஆண்டு, சில பின்னடைவுகளைக் கொடுத்திருந்தாலும் 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் A51 மற்றும் S20 Series ஸ்மார்ட் போன்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இவை, சாம்சங் நிறுவனத்திற்கு விட்ட இடத்தை மீட்டுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற காலாண்டில் S series மற்றும் V Series மூலம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய விவோ நிறுவனமும் இந்தாண்டு அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள புதிய மொபைல்களைக் களம் இறக்குகிறது. எனவே, ஸ்மார்ட் போன் சந்தையில் கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

Samsung Company
Samsung Company

எப்போதும் இல்லாத வகையில் ஸ்மார்ட் போன் சந்தையில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. சென்ற ஆண்டு இந்தியச் சந்தையில் 60 சதவிகிதமாக இருந்த சீன நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தாண்டு 72 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு