Published:Updated:

`நாங்க எங்கேயும் போகல' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வோடஃபோன்!

வோடஃபோன் இந்தியாவை விட்டுக் கிளம்புவதாக நேற்று வெளியான செய்தி வைரலாகியது.

வோடஃபோன்
வோடஃபோன்

நேற்று வோடாஃபோன் இந்தியச் சந்தையிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இது முற்றிலும் தவறான செய்தி என்று நிராகரித்திருக்கிறது வோடாஃபோன் குழுமம். சமீபத்தில் IANS செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்தச் செய்தி நேற்று வைரலானது. 'இது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் வதந்திதான்' என்று இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம். மேலும், இந்தியச் சந்தையில் அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தங்களுடைய வோடாஃபோன்-ஐடியா கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.

வோடஃபோன் & ஐடியா
வோடஃபோன் & ஐடியா

ரிலையன்ஸ் ஜியோ 2016 ஆம் ஆண்டு நுழைந்ததைத் தொடர்ந்து சந்தை அழுத்தம் காரணமாக மார்ச் 2017 வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்தன. வோடாஃபோன்-ஐடியா தன்னுடைய நெட்வொர்க் சேவைகளை முழுவதுமாக இணைக்கும் வேலையில் 22 டெலிகாம் வட்டங்களில் இதுவரை 11 வட்டங்களை முடித்துள்ளன. மற்ற வட்டங்களும் ஜூன் 2020-க்குள் முடிக்கப்படவுள்ளன. இந்த இணைப்பு இரு நிறுவனங்களுக்கும் பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.

1.2 ட்ரில்லியன் ரூபாய் கடன் உள்ளதாக இந்த வருடம் ஜூன் 30 அன்று தெரிவித்திருந்தது வோடஃபோன். இணைவதன் மூலம் ஜியோவிற்குப் போட்டியாக நிற்கமுடியும் என்று நம்பியிருந்தன இந்த நிறுவனங்கள். ஆனால், மாறாக அதற்குப் பின் பல வாடிக்கையாளர்களை இழக்கவே செய்திருக்கிறது. 334.1 மில்லியன் இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 320 மில்லியனாக இந்த ஜூன் மாதத்தில் குறைந்தது.

நிமிடத்துக்கு 6 பைசா.. ஏர்டெல், வோடஃபோன் அழைப்புகளுக்குக் கட்டணம் விதித்த ஜியோ!

அதிகம் டேட்டா பயன்படுத்தும் நிறுவனமாக இருந்தாலும், 4,873.9 கோடி ரூபாய் நஷ்டம் என்ற மோசமான நிலையில்தான் இருக்கிறது வோடஃபோன்.