Published:Updated:

இந்த 5 விஷயங்கள்ல டெக்னாலஜியை தப்பாதான் புரிஞ்சிருக்கோம்!

ச.ரிஷி குமார்

பொதுவாக நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் பிளான்களில் 100Mbps, 50Mbps வேகம் என்று குறிப்பிட்டிருக்கும். ஆனால், நமக்குக் கிடைக்கும் இணைய வேகம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

டெக்னாலஜி
டெக்னாலஜி ( Pixabay )

டெக்னாலஜி ரீதியாகப் பல விஷயங்களை நாம் ஏன் என்று கேட்காமலேயே பின்பற்றுகிறோம். அவற்றுள் சில தவறான புரிந்துணர்வுகள்கூட இருக்கலாம். அவற்றுள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. மெகா பிக்சல்கள்:

சமீபகாலங்களாக வெளியாகும் ஸ்மார்ட்போன் கேமராக்களில் உள்ள மெகா பிக்சல் 48, 64 எனக் கூடிக்கொண்டேபோகிறது. அதிகமான மெகாபிக்சல்கள் இருந்தால் நாம் எடுக்கும் புகைப்படம் நன்றாக வரும் என்பது தவறு. ஒரு கேமரா உருவாக்கும் படத்தின் தரம் சென்சார் அளவு, பிக்சல் அளவு மற்றும் மென்பொருள் செயலாக்கம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து வேறுபடும். பிறகு ஏன், மெகாபிக்சல்கள் பெரிதாகப் பேசப்படுகிறது என்றால், அது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்குத் தங்கள் மொபைலை எளிதாகச் சந்தைப்படுத்த ஒரு காரணியாக மாறிவிட்டது. 48MP உள்ள ஸ்மார்ட் போன் கேமராவில் எடுக்கும் படத்தின் தரத்தை 12MP உடைய ஸ்மார்ட் போனிலேயே எடுக்க முடியலாம்.

2. இன்டர்நெட் தரவிறக்க வேகம்:

பொதுவாக நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் பிளான்களில் 100Mbps, 50Mbps வேகம் என்று குறிப்பிட்டிருக்கும். ஆனால் நமக்குக் கிடைக்கும் இணைய வேகம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதற்குக் காரணம் அவர்கள் விளம்பரப்படுத்தும் Mb - மெகா பிட்ஸ்; நமக்கு கிடைக்கும் வேகம் MB - மெகா பைட்ஸ். 8 மெகாபிட்ஸ் சேர்ந்தால் ஒரு மெகாபைட். அதனால் இனி யாரும் இன்டர்நெட் ஸ்பீட் கம்மியாக உள்ளது என்று குறைகூறாதீர்கள் :)

3. எலக்ட்ரானிக்ஸ் அருகே காந்தங்களைப் பயன்படுத்துதல்:

பெரும்பாலும் நம் வீட்டு பெரியோர்களுள் பலர் "மின்னணு சாதனங்கள் அருகில் காந்தங்களைப் பயன்படுத்தாதே" என்று கூறும் வழக்கம் உண்டு. இதை முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன் பயன்பாட்டில் இருந்த சி.ஆர்.டி திரை உள்ள டிவி, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ஸ் அருகில் காந்தத்தைக் கொண்டுசென்றால் பழுது ஏற்பட்டுவிடும். ஆனால், இன்று நம் தொழில்நுட்பம் பன்மடங்கு முன்னேறிவிட்டது. இன்று நாம் பயன்படுத்தும் டிவி, துணி துவைக்கும் எந்திரம், கம்ப்யூட்டர் போன்றவை அருகில் காந்தத்தைக் கொண்டு சென்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

Technology
Technology
Pixabay

4. RAM கிளீனர் ஆப்ஸ் பயன்படுத்துதல்:

இதைப் படிக்கும் எத்தனை வாசகர்கள் தாங்கள் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போனிகளில் ரேம் கிளீனர் ஆப்ஸ் பயன்படுத்துகிறீர்கள்? RAM கிளீனர் ஆப் தேவையா. ஆரம்ப கால ஆண்ட்ராய்டு போன்களில் RAM அளவு மிகவும் கம்மியாக இருந்தது. அதனால், அன்றைய நாள்களில் கிளீனர் ஆப்ஸ் பயன்பட்டது. ஆனால், இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் அனைத்திலுமே, பயன்படுத்தாத ஆப்களை தானாகவே கண்டறிந்து தேவையில்லாத மெமரியை அழித்துவிடும் அளவுக்கு ஆண்ட்ராய்டின் செயல்திறன் மற்றும் ரேம் மேனேஜ்மென்ட் சக்திவாய்ந்ததாக உள்ளது. அதனால் நாம் Manual ஆக மெமரி கிளீனர் ஆப்ஸ் உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

5. உங்கள் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்தல்:

உங்களுள் சில பேர் ஸ்மார்ட்போனில் பேட்டரி 0% வந்தவுடன் தான் சார்ஜ் செய்ய வேண்டும் இல்லை என்றால் பேட்டரி போய் விடும் என்று நினைப்பீர்கள். இன்னும் சிலபேர் இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்தால் போன் வெடித்துவிடும் என்று நினைப்பீர்கள். இவை இரண்டும் ஒரு காலத்தில் நடந்தவைதான். அப்போது உபயோகத்தில் இருத்தது லித்தியம் கார்பனேட் வகை பேட்டரிகள். அதன் செயல்திறன் மிகவும் கம்மி. ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களில் உள்ளவை லித்தியம் அயன் வகை பேட்டரிகள். இது மிகவும் செயல்திறன் மிக்கது. மேலும், இன்றுள்ள மென்பொருள் செயலாக்கம், போன் மற்றும் லேப்டாப்களில் சார்ஜ் முழுமை அடைந்துவிட்டால் தானாகவே மின்னோட்டத்தை நிறுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவை. அதனால் ஓவர் டைம் சார்ஜ் செய்தாலும் நம் பொருள்களுக்கு ஒரு சேதமும் ஏற்படாது.