Published:Updated:

`4 லட்சம் ஆப்ஸ்; 45 லட்சம் கூகுள் கேள்விகள்!’ - இணைய உலகின் ஒரு நிமிட ஆச்சர்யம்#VikatanInfographics

பெ.மதலை ஆரோன்
HARIF MOHAMED S

நாம் சாதாரணமாகக் கடந்துவிடும் ஒரு நிமிடம் அதாவது 60 நொடிகளில் இணைய உலகில் என்னென்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Internet World
Internet World

இணையதளத்தைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இணையம் இல்லாமல் இருப்பதில்லை. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர் என்ற பட்டியல் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. நாம் நினைப்பதை விட மிகப்பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இணைய உலகில், நாம் சாதாரணமாகக் கடந்துவிடும் ஒரு நிமிடம் அதாவது 60 நொடிகளில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து அமெரிக்காவின் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், பல்வேறு ஆச்சர்யத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி 2019-ம் ஆண்டில் இணையத்தில் 1 நிமிடத்தில் என்னென்ன நடந்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

`4 லட்சம் ஆப்ஸ்; 45 லட்சம் கூகுள் கேள்விகள்!’ - இணைய உலகின் ஒரு நிமிட ஆச்சர்யம்#VikatanInfographics
`4 லட்சம் ஆப்ஸ்; 45 லட்சம் கூகுள் கேள்விகள்!’ - இணைய உலகின் ஒரு நிமிட ஆச்சர்யம்#VikatanInfographics
`4 லட்சம் ஆப்ஸ்; 45 லட்சம் கூகுள் கேள்விகள்!’ - இணைய உலகின் ஒரு நிமிட ஆச்சர்யம்#VikatanInfographics
Infographics
Infographics
Vikatan

உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு படி, 442 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும், 2019-ல் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இணையதளத்தைப் பயன்படுத்துவதில் சீனாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.