Published:Updated:

அவதூறுகளை தடுக்க வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் எடுத்த நடவடிக்கை! #AyodhyaVerdict

இந்தியாவில் இதற்குமுன் உறுப்பினர் பதிவுசெய்த செய்திக்காக அட்மின் கைதான சம்பவங்கள் உண்டு.

வாட்ஸ்அப் 'அட்மின் ஒன்லி'
வாட்ஸ்அப் 'அட்மின் ஒன்லி'

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இன்று காலை வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பின் விவரங்களைக் கீழ் காணும் கட்டுரையில் பார்க்கலாம்.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

இந்த தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் முன்னேற்பாடாகப் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களிலும் இதுகுறித்த அவதூறு மற்றும் போலி செய்திகள் பரப்பாமல் மக்கள் இருக்கவேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இப்படியான போலி செய்திகள் மற்றும் வெறுப்புணர்வு தூண்டும் பதிவுகள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பொதுத்தளங்களை விட அதிக வீரியத்துடன் வாட்ஸ்அப் குரூப்களில்தான் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் இதற்குமுன் உறுப்பினர் பதிவுசெய்த செய்திக்காக அட்மின் கைதான சம்பவங்கள் உண்டு.

Vikatan

இதனால் அதிக உறுப்பினர்கள் இருக்கும் பொதுகுரூப்கள் பலவற்றையும் 'அட்மின் ஒன்லி' மோடுக்கு மாற்றிவருகின்றனர் அட்மின்கள். இதன்மூலம் இந்த குரூப்களில் அட்மின்கள் மட்டும்தான் மெசேஜ் அனுப்பமுடியும், அடையாளம் தெரியாத மூன்றாவது நபர் யாரும் இந்த குரூப்களில் அவதூறு பரப்பமுடியாது. இந்த விவகாரத்தின் வீரியம் குறையும்வரை இந்த மோடில் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் இந்த அட்மின்கள்.

'ஒன்லி அட்மின்ஸ்' வசதி |'Only Admins' Feature
'ஒன்லி அட்மின்ஸ்' வசதி |'Only Admins' Feature

இந்த வசதி குரூப் செட்டிங்ஸில் இடம்பெற்றிருக்கிறது. இதை குரூப் பெயரை கிளிக் செய்வதன் மூலம் பார்க்கமுடியும். இதனுள் சென்று 'Send Messages' பிரிவில் 'Only Admins' ஆப்சனை தேர்வுசெய்யவேண்டும். உங்கள் குரூப்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் ஆபத்தான பொய் பரப்புரைகள் மற்றும் போலி செய்திகள் பரவுவதாகத் தெரிந்தால் ஒவ்வொரு உறுப்பினராக நீக்காமல் நேராக இந்த மோடுக்கு சென்றுவிடலாம். இது போலி செய்திகள் பரவாமல் காக்கமுடியும்.