Published:Updated:

`ஒரே மெசேஜ்... மொத்த குரூப்பும் குளோஸ்' - கோளாறைச் சரிசெய்த வாட்ஸ்அப்!

கடந்த சில மாதங்களாக இருந்து வந்த ஒரு முக்கியக் கோளாறை தற்போது முழுவதுமாக சரி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

'Check Point' என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வாட்ஸ்அப்பில் ஒரு முக்கிய கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்தது. இந்தக் கோளாறு (bug) மூலம் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் எந்த ஒரு நபராலும் வாட்ஸ்அப் வெப் மற்றும் கூகுள் க்ரோமின் De-bugging கருவியான `டேவ் டூலை' பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட `Message Parameter'-ஐ மாற்றுவதன் மூலம் அந்த குரூப்பில் உள்ள அனைவரது வாட்ஸ்அப்பையும் செயலிழக்கச் செய்ய முடியும்.

வாட்ஸ்அப் WhatsApp
வாட்ஸ்அப் WhatsApp

இப்படி ஆகும்போது வாட்ஸ்அப்பை மறுபடியும் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே மீண்டும் இயங்கும். ஆனால், அந்த குரூப்பில் மீண்டும் இணைய முடியாது, அந்த குரூப்பில் இருந்த எந்த டேட்டாவும் நமக்குக் கிடைக்காது. அந்த குரூப்பை முழுவதும் அழித்தால் மட்டுமே பழையபடி வாட்ஸ்அப் நன்றாக இயங்கும். தற்போது இந்தச் சிக்கல் முழுவதும் சரி செய்யப்பட்டுவிட்டது என அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`120 நாள்களாக இன்டர்நெட் சேவை இல்லை!' - வாட்ஸ்அப் கணக்கை இழக்கும் காஷ்மீர் மக்கள்
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஃக்ரென் க்ரெட் (Ehren Kret) கூறுகையில்,``பக் பவுன்டி திட்டத்தின் கீழ் இந்தக் கோளாறைக் கண்டறிந்து உதவியதற்கு செக் பாயின்ட் நிறுவனத்திற்கு நன்றி. தெரியாதவர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்வதைத் தடுக்கப் பல புதிய மாற்றங்களை செப்டம்பர் மாத அப்டேட்டில் செய்துள்ளோம். அதனுடன் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்" என்றார்.