Published:Updated:

`Agree' கொடுக்கவில்லை என்றால் `Access' கட்... வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி சொல்வது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி சொல்வது என்ன?
வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி சொல்வது என்ன?

எந்த மாதிரியான தகவல்கள் பெறப்படுகின்றன என மிகவும் விரிவாக இதில் பட்டியலிட்டிருக்கிறது வாட்ஸ்அப். கிட்டத்தட்ட அனைவருமே இந்த செய்தியை நேற்று பெற்றிருப்பீர்கள். பலரும் படிக்காமலே 'Agree' கொடுக்கவும் செய்திருப்பீர்கள்.

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைத்திருக்கிறது. பிற வசதிகள் போல அல்லாமல் சத்தமில்லாமல் அப்டேட் எதுவும் இல்லாமலேயே இதை மாற்றியிருக்கிறது வாட்ஸ்அப். ஒரு முறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் காட்டியிருக்கிறது வாட்ஸ்அப். கிட்டத்தட்ட அனைவருமே இந்த செய்தியை நேற்று பெற்றிருப்பீர்கள். பலரும் படிக்காமலே 'Agree' கொடுக்கவும் செய்திருப்பீர்கள்.

வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி!
வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி!
அப்படி புதிய கொள்கைகளுக்கு ஓகே கொடுக்கவில்லை என்றால் பிப்ரவரி 8-ம் தேதிக்குப் பிறகு உங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. சரி, அப்படி என்ன சொல்கிறது வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள்?!

எப்படி வாட்ஸ்அப் பயனர்கள் தகவல்களைக் கையாளும் என்பதை விவரிக்கிறது இந்த பிரைவசி கொள்கைகள். புதிதாக Transactions, Payments Data போன்ற பகுதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எப்படி தொழில் நிறுவனங்கள் ஃபேஸ்புக் தயாரிப்புகளைக் கையாள்வது டேட்டாவை சேமிப்பது, எப்படி ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் வாட்ஸ்அப் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் விரிவாக இந்த கொள்கைகளை அதன் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறது வாட்ஸ்அப். அதைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

https://www.whatsapp.com/legal/updates/privacy-policy/

https://www.whatsapp.com/legal/updates/terms-of-service

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் ஒன்று எப்படி மீடியா ஃபைல்களை தங்களின் சர்வர்களில் வாட்ஸ்அப் ஸ்டோர் செய்யப்போகிறது என்பதுதான். முன்பு போல இப்போதும் இது encrypted வடிவில்தான் ஸ்டோர் செய்யப்படப்போகிறது. ஆனால், புதிய முறையால் ஃபார்வேர்டு செய்யப்படும்போது அதை எளிதில் வாட்ஸ்அப் ஸ்டோர் செய்துகொள்ளும்.

Whatsapp
Whatsapp

எந்த மாதிரியான தகவல்கள் பெறப்படுகின்றன என விரிவாக பட்டியலிட்டிருக்கிறது வாட்ஸ்அப். ஒரு பயனாளர் எப்படி வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார், எந்த மாதிரியான வசதிகளை பயன்படுத்துகிறார் (Status, Messaging, Calling), ஆன்லைனில் எப்போது இருக்கிறார் என நீண்டுகொண்டே செல்கிறது இந்தப் பட்டியல். நாம் அனுப்பும் மெசேஜைத்தவிர மற்ற அனைத்துக்குமே ரெகார்ட் வைத்திருப்போம் எனச் சொல்லமால் சொல்கிறது வாட்ஸ்அப்.

ஏற்கெனவே ஒரு மெசேஜ் எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கிறது வாட்ஸ்அப். பொய் பரப்புரைகளைத் தடுக்கும் முயற்சியாக இது செய்யப்பட்டுவருகிறது. சமீபத்தில் அதிகம் ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜ்களை நேரடியாக இணையத்தில் தேடிப் பார்க்கும் வசதியையும் அறிமுகம் செய்திருந்தது வாட்ஸ்அப்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லொகேஷன் டேட்டாவை பெறுவதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படத் தெரிவித்திருக்கிறது. ஒருவருக்கு லொகேஷன் அனுப்பவேண்டும் என்றால் வாட்ஸ்அப்பிற்கு லொகேஷன் ஆக்சஸ் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

நேரடியாக லொகேஷன் தகவல் பெறப்படாது என்றாலும் IP அட்ரஸ், போன் நம்பர் ஏரியா கோடு போன்ற தகவல்களை வைத்து தோராயமாக லொகேஷன் பெறப்பட்டு பயன்படுத்தப்படுமாம்.

மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களுக்கு உங்கள் தகவல்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து குறிப்பிடப்பட்டிருப்பது...

WhatsApp
WhatsApp
“We work with third-party service providers and other Facebook Companies [which includes Messenger, Instagram, Oculus, and Portal] to help us operate, provide, improve, understand, customize, support, and market our Services,”

இதைத் தவிரப் பெரிதாக ஒன்றும் மாற்றப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் பிரைவசி கொள்கைகள்தான் தொடர்கின்றன. என்ன மாதிரியான தகவல்கள் பெறப்படுகின்றன என இன்னும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் புதிதாக அச்சம் கொள்ள ஒன்றுமில்லை. ஏற்கெனவே செய்துவந்ததை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்போகிறது ஃபேஸ்புக். வாட்ஸ்அப் பே போன்ற புதிய சேவைகள் வந்துள்ளதால் அதற்காகவும் சில விஷயங்களைப் புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்குடன் இன்னும் நுண்ணிய அளவில் வாட்ஸ்அப்பை ஒருங்கிணைக்கும் திட்டத்தை இதன் வழி நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு