மெட்டா நிறுவனத்தின் குறுஞ்செய்தி பகிரும் செயலிகளில் ஒன்று WhatsApp. உலகெங்கும் கோடிக்கணக்கில் பயனாளர்களைக் கொண்டிருக்கும் இந்தச் செயலி ஏராளமான சேவைகளை வழங்கி வந்தாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சேவை ஒன்றை இப்போது அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.
பொதுவாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய வேண்டும் என்றால் பயனருடைய எண்ணை போனில் பதிவு செய்ய வேண்டும். பெரிதாக உரையாட அவசியம் இல்லாதவர்களுக்கு செய்தி அனுப்பவும் அவர்களின் எண்ணைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எண்ணைச் சேமித்து விட்டால் வாட்ஸ்அப் ப்ரொபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை அந்த நபர்களுக்குக் காட்டும். இதனால் பயனர்களின் பிரைவசி பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஒருவரின் எண்ணை சேமிக்காமலேயே அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாட்ஸ்அப்பில் புதிதாக நீங்கள் பெறுகிற எண்ணை கிளிக் செய்தால் போன் செய்யும் ஆப்சன் காட்டும். அதனைச் சேமிக்கவும் முடியும். இப்பொது அவற்றோடு நேரடியாக அந்த நபருக்கு செய்தி அனுப்பும் Direct Message ஆப்சனும் இணைக்கப்பட இருக்கிறது. தற்போது இந்த வசதி, சோதனை நிலையில் இருப்பதால் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் சேமிக்காத எண்ணுக்கு மெசேஜ் செய்ய http://wa.me/phonenumber என்கிற இணைப்பில் 'phonenumber' என இருக்கும் இடத்தில் யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ அவர்களின் எண்ணை உள்ளீடு செய்து ப்ரௌசரில் தேடினால் அந்தப் பக்கம் உங்களை வாட்ஸ் அப் தளத்துக்கு இழுத்துச் செல்லும். இந்த வசதி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்களுடன் உரையாட Communities வசதி, 32 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கும் Group Call, 2GB அளவில் பைல்கள் அனுப்பும் வசதி என வரிசை கட்டி நிற்கின்றன வாட்ஸ்அப்பின் அடுத்தடுத்த அப்டேட்டுகள். பயனர்களின் தரவு பாதுகாப்புக்கும் தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும் ஒரே செய்தியை பார்வேர்ட் செய்யும் குழுக்களின் எண்ணிக்கையை ஐந்தில் இருந்து ஒன்றாகக் குறைக்கவும் இருக்கிறது வாட்ஸ்அப்.