Published:Updated:

குரூப் சாட்டில் Poll ஆப்சன்; வாட்ஸ்அப் புது அப்டேட் இதுதான்!

வாட்ஸ்அப் செயலி

குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். வேறு என்னென்ன புது அப்டேட்கள் வரவிருக்கின்றன எனப் பார்ப்போம்.

குரூப் சாட்டில் Poll ஆப்சன்; வாட்ஸ்அப் புது அப்டேட் இதுதான்!

குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். வேறு என்னென்ன புது அப்டேட்கள் வரவிருக்கின்றன எனப் பார்ப்போம்.

Published:Updated:
வாட்ஸ்அப் செயலி

மெட்டா குழுமத்தைச் சேர்ந்த வாட்ஸ்அப் புதிய சேவைகளை வழங்கத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். Poll ஆப்ஷன் ஏற்கனவே பேஸ்புக்கில் நடைமுறையில் உள்ளது. குரூப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, பலவித ஆப்ஷனோடு ஓட்டெடுப்பு நடத்தலாம். எந்த ஆப்ஷனுக்கு குழுவின் உறுப்பினர்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இறுதியில் அறிய முடியும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளுக்கு இதுபோன்ற Poll ஆப்ஷன் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இது தற்போதைக்கு iOS பீட்டா வெர்சனில் மட்டும் கிடைக்கிறது. சோதனை ஓட்டத்தில் இருப்பதால் எப்போது முழுமையாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரியவில்லை. குழுவில் அனுப்பப்படும் செய்திகள் எண்ட் டு எண்ட் என்கிரிப்ட் முறையில் பாதுகாக்கப்படும். ஆன்ட்ராய்ட் வெர்சனுக்கு வெயிட்டிங்!

வாட்ஸ்அப்  Poll ஆப்ஷன்
வாட்ஸ்அப் Poll ஆப்ஷன்

அதே போல வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் படங்களை எடிட் செய்ய இன்னும் சில டூல்களையும் இணைத்திருக்கிறார்கள். அதில் Blur ஆப்சனும் ஒன்று. இதன் மூலம் பகிரவிருக்கும் ஒரு புகைப்படத்தில் நாம் விரும்பிய பகுதிகளை ப்ளர் செய்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு படத்தில் இருக்கும் மொபைல் எண்ணை மட்டும் ப்ளர் செய்துவிட்டு பகிர இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும். இதுவும் iOS இல் ஏற்கெனவே கிடைக்கிறது எனினும் வாட்ஸ்அப் ஐஓஎஸ்க்கும் ஆன்ட்ராய்டுக்குமான வித்தியாசத்தைக் குறைக்க முயற்சித்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!