Published:Updated:

பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!
பிரீமியம் ஸ்டோரி
பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

சில நேரங்களில் தவறுதலாக ‘Delete for everyone' கொடுப்பதற்குப் பதிலாக ‘Delete for me' கொடுத்துவிடுவோம். பிறகு அந்த மெசேஜை நம்மால் டெலிட் செய்யவே முடியாது

பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

சில நேரங்களில் தவறுதலாக ‘Delete for everyone' கொடுப்பதற்குப் பதிலாக ‘Delete for me' கொடுத்துவிடுவோம். பிறகு அந்த மெசேஜை நம்மால் டெலிட் செய்யவே முடியாது

Published:Updated:
பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!
பிரீமியம் ஸ்டோரி
பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

OTP என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால் SMS என்ற வார்த்தையையே இந்நேரம் மறந்திருப்போம். அந்த அளவுக்குக் கடந்த சில ஆண்டுகளில் அனைவரையும் தன்வசம் ஈர்த்துவிட்டது வாட்ஸ்அப். வெறும் டெக்ஸ்ட் மெசேஜிங் சேவையாகத் தொடங்கப்பட்டாலும் இன்று ஏகப்பட்ட வசதிகள் வாட்ஸ்அப்புக்கு வந்துவிட்டன. சமீபத்தில்தான் UPI மூலம் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பும் சேவையும் வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்டது. இப்படி அவ்வப்போது அப்டேட்ஸ் கொடுப்பதால்தான் போட்டிகள் பல இருந்தாலும் இன்றும் ராஜாவாக இருக்கிறது வாட்ஸ்அப். அப்படி சில சுவாரஸ்யமான புதிய அப்டேட்கள் இந்த மாதம் வாட்ஸ்அப்புக்கு வருகின்றன.

சத்தமில்லாமல் எஸ்கேப்!

வாட்ஸ்அப்பில் சிலர் வற்புறுத்தலால் எதற்கென்றே தெரியாமல் பல குரூப்களில் நாம் இருப்போம். வெளியே வந்தால் ‘xxx left' என்று காட்டிவிடும் என்பதாலேயே பலரும் குரூப்பை விட்டு வெளியே வராமல் அந்த குரூப்பை மட்டும் சைலன்ட்டில் போட்டு வைத்திருப்பார்கள். இனி அந்தக் கவலை வேண்டாம். குரூப்பில் இருந்து விலகினால் அது அந்த குரூப்பின் அட்மின்களுக்கு மட்டுமே காட்டப்படும். மற்றவர்களுக்குத் தனியாக அது காட்டப்படாது.

பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!
பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

எப்போ வேணும்னாலும் ஆன்லைனில் இருப்பேன்டா ஸ்டைலா, கெத்தா!

‘என்ன நைட் 3 மணி வரை ஆன்லைன்ல இருக்க!' என நம்மிடம் last seen/online தகவலை வைத்து சிலர் விசாரித்திருப்பார்கள். அக்கறையுடன் சிலர் விசாரித்தாலும், ‘ஆன்லைன்ல இருக்குறது ஒரு குத்தமாடா?!' எனச் சிலரது விசாரிப்புகள் தோன்ற வைக்கும். அதற்கும் மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கிறது வாட்ஸ்அப். ஏற்கெனவே மொத்தமாக உங்களால் last seen/online தகவலை மறைக்க முடியும். இப்போது கூடுதலாக, இந்தத் தகவலை யாருக்குக் காட்டலாம் யாருக்குக் காட்டக்கூடாது என நாம் தேர்வுசெய்யும் வசதியைக் கொடுத்திருக்கிறது வாட்ஸ்அப்.

ஸ்க்ரீன்ஷாட்டுக்குத் தடா!

சமீபத்தில் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்' ரக ‘View Once' வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருந்தது. இதில் நீங்கள் அனுப்பும் போட்டோ/வீடியோவை எதிர்முனையில் இருப்பவர் பார்த்த உடனே அவை டெலிட் ஆகிவிடும். பரவலாகப் பயன்படுத்தும் இந்த வசதியில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. சிலர் ஒரு முறை பார்க்கும்போதே போட்டோவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். ஸ்னாப்சாட்டில் இப்படி ஸ்க்ரீன்ஷாட் எடுத்தால் உடனடியாக நமக்கு அலெர்ட் வந்துவிடும். ஆனால், அப்படி வாட்ஸ்அப்பில் எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. புதிய அப்டேட்டுக்கு பிறகு இப்படியான ‘View Once' போட்டோக்கள் ஸ்க்ரீன்ஷாட்டே எடுக்க முடியாத வண்ணம் ப்ளாக் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.

இவை இல்லாமல் இன்னும் பல அப்டேட்களை அடுத்தடுத்த மாதங்களில் வெளியிடத் தயாராக இருக்கிறது வாட்ஸ்அப். இப்போது வாட்ஸ்அப்பில் அனைவரும் வைக்கும் ஸ்டேட்டஸ்கள் தனியாக ஒரு இடத்தில் பட்டியலிடப்படும். அங்கே சென்று வரிசையாக அவற்றை நம்மால் பார்க்க முடியும். இது அல்லாமல் ஸ்டேட்டஸ் பார்க்க மற்றொரு மாற்றுவழியையும் கொண்டுவரப்போகிறது வாட்ஸ்அப். நீங்கள் குறிப்பிட்ட நபருடன் சாட் செய்துகொண்டிருக்கும்போதே அவரது முகப்புப்படத்தை க்ளிக் செய்து ஃபேஸ்புக், இன்ஸ்டா ஸ்டோரி பார்ப்பது போல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸையும் பார்க்க முடியும்.

பிரைவசி காக்கும் வாட்ஸ்அப் அப்டேட்!

சில நேரங்களில் தவறுதலாக ‘Delete for everyone' கொடுப்பதற்குப் பதிலாக ‘Delete for me' கொடுத்துவிடுவோம். பிறகு அந்த மெசேஜை நம்மால் டெலிட் செய்யவே முடியாது. இதனால் தர்மசங்கடமான நிலையில் சிக்கியிருப்போம். இதற்குத் தீர்வாக undo delete வசதியைக் கொண்டுவரும் முயற்சியிலும் இருக்கிறதாம் வாட்ஸ்அப். மேலும் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை அனைவருக்கும் டெலிட் செய்யவேண்டும் என்றால் அனுப்பியதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் மட்டுமே முடியும். ஆனால், இப்போது இரண்டு நாள்கள் வரை இதற்கு நேரம் தரப்படும்.

தொடர்ந்து பிரைவசிக்கு முக்கியத்துவம் தரும் சேவையாகவே வாட்ஸ்அப்பை முன்னிறுத்தி வருகிறார் மார்க் சக்கர்பெர்க். இந்தப் புதிய அப்டேட்கள் அதை நோக்கிய முக்கிய நகர்வு!