Published:Updated:

7 நாட்களுக்குப் பிறகு தானாக அழிந்துவிடும் மெசேஜ்கள்... புதிய வாட்ஸ்அப் வசதி எப்படிச் செயல்படுகிறது?

வாட்ஸ்அப்

எவ்வளவு நேரத்துக்குப் பிறகு மெசேஜ்கள் அழிய வேண்டும் என நம்மால் செட் செய்யமுடியாது. இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதையும் விளக்கியிருக்கிறது வாட்ஸ்அப் தரப்பு.

7 நாட்களுக்குப் பிறகு தானாக அழிந்துவிடும் மெசேஜ்கள்... புதிய வாட்ஸ்அப் வசதி எப்படிச் செயல்படுகிறது?

எவ்வளவு நேரத்துக்குப் பிறகு மெசேஜ்கள் அழிய வேண்டும் என நம்மால் செட் செய்யமுடியாது. இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதையும் விளக்கியிருக்கிறது வாட்ஸ்அப் தரப்பு.

Published:Updated:
வாட்ஸ்அப்
எஸ்.எம்.எஸ்களை மொத்தமாக வழக்கொழியச் செய்து இன்று மெசேஜிங்கிற்கு அனைவருக்கும் முதல் சாய்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். மாற்றுகள் எனப் பல ஆப்கள் வெளிவந்திருந்தாலும் இன்றும் ‘சிறந்த சாட்டிங் சேவை’ என்ற அரியணையில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். சுமார் 40 கோடி இந்தியர்கள் இப்போது வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

இந்த இடத்தைத் தக்கவைக்கப் பயனர்களுக்குப் பயனுள்ள புதிய வசதிகளைத் தொடர்ந்து அப்டேட்கள் வழி அறிமுகம் செய்துகொண்டே வருகிறது. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னுள்ள வாட்ஸ்அப்பை இப்போது பார்த்தால் அடையாளமே தெரியாத அளவுக்கு வசதிகளை மேம்படுத்தி வருகிறது வாட்ஸ்அப். டார்க் மோடு, அனிமேடட் ஸ்டிக்கர்ஸ் எனச் சமீபத்தில் கூட நிறைய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இந்த வரிசையில் இப்போது 'Disappearing Messages' என்ற வசதி உலகமெங்கும் இருக்கும் 200 கோடி வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இந்த மாதத்திற்குள் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"Because not all messages need to stick around forever." என்று ஒரு குட்டி வீடியோ மூலம் இந்த வசதியை உலகத்திற்குக் காட்டியிருக்கிறது வாட்ஸ்அப். தனிநபர் சாட், குரூப் சாட் என இரண்டிலுமே 'Disappearing Messages' வசதி இடம்பெறும். குரூப் அட்மின் பயன்படுத்தும்படி இந்த வசதி இருக்கும். சரி, 'Disappearing Messages' வசதி என்ன செய்யும், அதனால் என்ன பயன்?
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாக அழிந்துவிடும். நீங்கள் அனுப்பும் எந்த மெசேஜூம் ஏழு நாட்களுக்கு மேல் வாட்ஸ்அப்பில் இருக்காது என்ற நிம்மதியுடன் உங்களால் சாட் செய்யமுடியும். இதே போன்ற ஒரு வசதி டெலிகிராமிலும் உண்டு. தன் பயனாளர்களுக்கு 'Secret Chat’ என்ற அம்சத்தின் மூலம் பகிரப்படும் அனைத்தையுமே தேர்வு செய்த நேரத்துக்குப்பின் அழித்துவிடும் வசதியை டெலிகிராம் தருகிறது. இந்த ரகசிய சாட்களை தன்னுடைய எந்த சர்வரிலும் டெலிகிராம் சேகரிப்பதில்லை. அது மட்டுமல்லாமல், அந்த சாட்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் அனுமதிப்பதில்லை. ஆனால் வாட்ஸ்அப் முழுவதுமாக end-to-end encryption செய்யப்பட்டது என்பதால் ஏற்கெனவே எந்த மெசேஜூம் வாட்ஸ்அப் சர்வர்களில் சேகரிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp
WhatsApp

வாட்ஸ்அப்பில் இந்த 'Disappearing Messages' வசதியைப் பொறுத்தவரையில் ஏழு நாட்கள் என்ற காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு நேரத்துக்குப் பிறகு மெசேஜ்கள் அழிய வேண்டும் என நம்மால் செட் செய்யமுடியாது. இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதையும் விளக்கியிருக்கிறது வாட்ஸ்அப் தரப்பு.

"இந்த ஏழு நாள் காலம் என்பது அனுப்பும் மெசேஜ்கள் நிரந்தரமானது இல்லை என்ற நிம்மதியைப் பயனர்களுக்குத் தருகிறது. அதே நேரத்தில் குறுகிய காலத்தில் மெசேஜ்கள் அழித்துவிட்டால் என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதையே மறந்துவிடுவோம். நீங்கள் வாங்க வேண்டிய ஷாப்பிங் லிஸ்ட், முகவரிகள் என முக்கிய தகவல்களும் அழிந்துவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால்தான் ஏழு நாட்கள் என்ற இந்த கால அளவை நிர்ணயித்துள்ளோம்."
வாட்ஸ்அப் தரப்பு
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தொடங்கி எங்கெல்லாம் வாட்ஸ்அப் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த வசதி இந்த மாதத்திற்குள் கிடைத்துவிடும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மற்ற சில முக்கிய குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.

- இந்த வசதி மெசேஜ் மட்டுமல்லாமல் போட்டோ, வீடியோ என அனைத்தையுமே ஏழு நாட்களுக்குப் பிறகு அழித்துவிடும். அதனால் முக்கியமானவற்றை அதற்கு முன்பே பிரதி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- ஒரு வேலை ஒரு பயனாளர் ஏழு நாட்களுக்கு மெசேஜை பார்க்கவே இல்லையென்றாலும் அவை அழிந்துவிடும். இருப்பினும் நோட்டிஃபிகேஷனில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை அவர்கள் பார்க்கக்கூடும்.

- எதாவது ஒரு மெசேஜ்க்கு இப்போது ரிப்ளை செய்யப்பட்டிருந்தால் அது அழிக்கப்பட்டாலும் இந்த ரிப்ளை மெசேஜுடன் பழைய மெசேஜூம் காட்டப்படும்.

WhatsApp
WhatsApp

- 'Disappearing message' பார்வர்ட் செய்வதால் அதுவும் தானாக ஏழு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடாது. வசதி தேர்வுசெய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது நடக்கும்.

- இந்த மெசேஜ்களை ஒருவரின் பழைய பேக்-அப் கொண்டு மீட்டெடுக்க வாய்ப்புகள் உண்டு.

- இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் இதற்கு முன்பு உள்ள எந்த மெசேஜூம் அழியாது.

இந்த வசதி உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும்... கருத்தை கமென்ட்களில் பதிவிடுங்கள்!