Published:Updated:

Dear Nothing - தென் இந்தியர்களுக்கு எதிரான நிறுவனமா nothing ?

Nothing

நேற்று இரவு nothing நிறுவனத்தின் முதல் மொபைல் வெளியாகியிருந்தாலும், யூடியூபிலும் ட்விட்டரிலும் #DearNothing என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.

Dear Nothing - தென் இந்தியர்களுக்கு எதிரான நிறுவனமா nothing ?

நேற்று இரவு nothing நிறுவனத்தின் முதல் மொபைல் வெளியாகியிருந்தாலும், யூடியூபிலும் ட்விட்டரிலும் #DearNothing என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.

Published:Updated:
Nothing

லண்டன் நிறுவனமான Nothingங்கிற்கும், தென் இந்தியாவில் டிரெண்டாகிக்கொண்டிருக்கும் #DearNothingங்கிற்கும் என்ன சம்பந்தம் ?

Dear Nothing - தென் இந்தியர்களுக்கு எதிரான நிறுவனமா nothing ?

டெக் நிறுவனங்களாகட்டும், ஒடிடி நிறுவனங்களாகட்டும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொருளை சந்தைப்படுத்தும் முன்னர், விமர்சகர்களுக்கு பொருட்களை அனுப்பிவைப்பார்கள். முன்னரே அந்த கேட்ஜெட்டை விமர்சகர்கள் வாங்கியிருந்தாலும், எம்பார்கோ எனப்படும் குறிப்பிட்ட நாள் வரை, அந்த மொபைல் குறித்த விமர்சனங்களை அவர்கள் வெளியிடக்கூடாது. இப்படித்தான், மொபைல், வாகனங்கள் என எல்லாம் நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த எந்த விமர்சகர்களுக்கு எல்லாம் தங்களின் பொருட்களைத் தர வேண்டும் என்பது முழுக்க முழுக்க அந்த நிறுவனங்களும், அந்த நிறுவனம் தொடர்பான PRகளும் எடுக்கும் முடிவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Dear Nothing : என்ன நடந்தது ?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான கார்ல் பேயின் புதிய நிறுவனமான nothing மொபைல்களை தென்னிந்தியாவைச் சேர்ந்த யூடியூப் விமர்சகர்கள் சிலருக்கு அனுப்பவில்லை என தெரிகிறது. பிரபல தெலுங்கு யூடியூப் நிறுவனமான Prasadtechintelugu நக்கலாக Nothing மொபைலின் பாக்ஸைப் பிரிப்பது போலவும், அதனுள் ஒரு கடிதம் இருப்பது போலவும் காண்பிக்கிறார். அந்தப் போலியாக உருவாக்கப்பட்ட கடிதத்தில் " Hi Prasad THE DEVICE IS NOT FOR SOUTH INDIAN PEOPLE " என நத்திங் விளம்பர ஃபாண்ட் டிசைனிலேயே அச்சடிக்கப்படிருக்கிறது . தன் சானலுக்கு மொபைல் வராததால் , இவர் இப்படியாக தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் . அவருமே அதைப் போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் என்றே குறிப்பிடுகிறார்.

ஆனால், கொஞ்சம் கொஞ்சம் சமூக வலைதளங்களில் இந்தக் கடிதம் உண்மை என பரவ ஆரம்பித்தது. தென் இந்தியர்கள் புறக்கணிப்படுகிறார்களா என்கிற கலகக்குரல் எல்லாம் உருவானது. அதற்கும் இந்த நிறுவனம் , இந்தியாவுக்கான கெட்ஜெட்களை பேக்கிங் செய்திருப்பதே தமிழகத்தில் தான் எனவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் #Dearnothing #BoycottNothing போன்ற ஹேஷ்டேக்குகள் இந்தியாவில் டிரெண்ட் செய்யப்பட்டன. நத்திங் மொபைல் தென் இந்தியர்களுக்கு இல்லை போல, எனவே நாம் அதைப் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டர் முழுக்கவே நெட்டிசன்ஸ் ட்விட்டுகளை கொட்ட ஆரம்பித்தனர் . அந்த நிறுவனம் எழுதாத ஒரு கடிதத்திற்கு, தொடர்ந்து அந்த நிறுவனத்தை வசைபாடிவருகிறார்கள்.

ஒரு நிறுவனம் விமர்சகர்களுக்கு ஒரு மொபலை தரவில்லையெனில் அது குறித்து கேள்வி எழுப்ப எல்லா உரிமையும் இருக்கிறது. வட இந்திய யூடியூபர்களுக்கு சலுகைகளும், தென் இந்திய யூடியூபர்களுக்கு பாரபட்சமும் காட்டப்படுகிறது எனில் அது நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டியது. அதே சமயம், இதை தென் இந்திய மக்களுக்கு எதிராக திசை திருப்புவது என்பது அபத்தமானதும், ஆபத்தானதும் ஆகும்.

இதுகுறித்து நத்திங் நிறுவனம், எந்த விளக்கமும் இதுவரையில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் எளிதாக டிரெண்ட் செய்து, ஒரு நிறுவனத்துக்கு அவப்பெயரை உண்டாக்க வாய்ப்புள்ளது என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.