Published:Updated:

`NRC எங்கள் உழைப்புதான்!' - கொண்டாட்டத்துக்குப் பிறகு பின்வாங்கிய விப்ரோ

NRC Wipro/விப்ரோ
NRC Wipro/விப்ரோ

விப்ரோ நிறுவனம் ஏன் அந்தப் பக்கத்தை நீக்கியது என விளக்கம் கேட்பதற்காக அந்நிறுவனத்தை அணுகியபோது, அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

நாட்டின் பெரும் ஐ.டி.நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ அஸ்ஸாமில் NRC திட்டத்தைச் செயலுக்குக் கொண்டுவர தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு எத்தகையது என்று பெருமை கொள்ளும் விதமாக அதன் இணையதளத்தில் தனிப்பக்கம் ஒன்றை உருவாக்கியிருந்தது. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்தியா முழுவதற்குமான NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வரும் நிலையில், அந்நிறுவன இணையதளத்திலிருந்து அப்பக்கம் நீக்கப்பட்டது.

NRC Protest
NRC Protest

விப்ரோ நிறுவனத்திடம் ஏன் இடையில் அந்தப் பக்கம் நீக்கப்பட்டது என விளக்கம் கேட்பதற்காக அந்நிறுவனத்தை அணுகினோம். ஆனால், அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. விளக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். இந்தநிலையில், சில மணி நேரத்தில் மீண்டும் அப்பக்கம் விப்ரோ இணையதளத்தில் நிறுவப்பட்டது.

`குடியரசுத் தலைவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை!'- CAA, NRC க்கு எதிராக புதுவை பல்கலைக்கழக மாணவர்கள்

அந்தப் பக்கத்தில் எவ்வாறு குடியுரிமை விண்ணப்பங்களைப் பெறுவதிலும், அதை வெற்றிகரமாகப் புதுப்பிப்பதிலும் தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தது என்பதைப் பற்றிய தகவல்களைப் பதிவிட்டிருந்தது. சுமார் 8,000 பணியாளர்கள், 8,000 கணினிகள் மற்றும் 6,000 ஸ்கேனர்கள் கொண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் NRC-க்கான பணிகளை மேற்கொண்டது பற்றி அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CAA/NRC எதிர்ப்பு போராட்டம்
CAA/NRC எதிர்ப்பு போராட்டம்

இந்தத் திட்டத்திற்காக 2016-ஆம் ஆண்டு CISCO நிறுவனத்தின் `Digital Innovation in Citizen Service' விருது பெற்றுள்ளது. NRC தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் மாநில ஒருங்கிணைப்பாளர் ப்ரதீக் ஹாஜிலாவும் NRC பணிகளுக்காக விப்ரோ நிறுவனத்தைப் பாராட்டினார். ஆனால், சமீபத்தில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு