Published:Updated:

முத்த எமோஜியை அதிகமாகப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு முதலிடம்! #WorldEmojiDay

பெ.மதலை ஆரோன்

நேரடியாகக் காதல், கோபம், அழுகை என்று உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத பலருக்கும் உதவியாக இருப்பது எமோஜிக்கள்தான்.

World Emoji Day
World Emoji Day

தற்போதைய டிஜிட்டல் உலகில் எமோஜிக்கள் இல்லாமல் எந்த ஓர் உரையாடலும் இருப்பதில்லை. கவலை, சோகம், மகிழ்ச்சி, கோபம் என்று அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்த வித்தியாசமான முகபாவத்துடன் ஆயிரக்கணக்கான எமோஜிகள் உள்ளன.

எமோஜிக்கள்
எமோஜிக்கள்

நேரடியாகக் காதல், கோபம், அழுகை என்று உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத பலருக்கும் உதவியாக இருப்பது எமோஜிக்கள்தான். மனிதனின் உணர்வுகளை எமோஜியாக முதன்முதலில் வடிவமைத்தது சுகிடா குரிடாதான். முதன்முதலில் 2014 ஜூலை 17-ம் தேதி உலக எமோஜி தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த எமோஜிக்கள் அனைத்தும் 1995-ல் இருந்து மொபைல் இன்டர்நெட் பிளாட்பார்ம்-க்கு வந்தது. அப்போது இருந்த எமோஜிக்களின் எண்ணிக்கை வெறும் 76 தான். மெர்சல் மற்றும் கபாலி திரைப்படம் வெளியான போது விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது.

World Emoji Day
World Emoji Day
Vikatan Infographics

ஃபேஸ்புக்கில் இருக்கும் 6 எமோஜிக்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 6 கோடி. அதேபோல் ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 500 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாகக் காதல், முத்தம், இதயங்கள், அதிக மகிழ்ச்சி, கண்ணடிப்பது, வெட்கம், அழுகை போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் அதிகம் பயன்படுத்தும், டாப் எமோஜிகளுக்கு விருதுகளும் கொடுக்கப்படுகின்றன.

Emoji
Emoji
World Emoji Awards 2019
World Emoji Awards 2019

ஒட்டுமொத்த சமூக வலைதளங்களில் 2019-ல் ஆண்டு கணக்குப்படி தற்போது 3,019 எமோஜிக்கள் உள்ளன. உலகளவில் மெஸெஞ்சரில் முத்த எமோஜியை அதிகமாகப் பயன்படுத்துவதில் முதலிடம் இந்தியாவுக்குத்தான்.

2019-ல் ஆண்டு கணக்குப்படி, சமூக வலைதளங்களில் தற்போது 3,019 எமோஜிக்கள் உள்ளன.

கனடா, தாய்லாந்து, இங்கிலாந்து நாடுகள் இதய எமோஜியும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா சிரிப்பு எமோஜியையும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

2019-ல் புதிதாக வெளிவந்துள்ள எமோஜிக்கள்!
2019-ல் புதிதாக வெளிவந்துள்ள எமோஜிக்கள்!

பல்வேறு மாற்றங்களுடன் புதிய ஸ்கின் டோன் வித்தியாசங்களுடன் புதிது புதிதான எமோஜிக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜிக்களை கமென்டில் தெரிவிக்கலாமே...