Published:Updated:

"இந்தியாவில் `Positive' ஆன தாக்கங்களை ஏற்படுத்திய YouTube!" - Oxford Economics அறிக்கை சொல்வதென்ன?

YouTube

இந்தியாவில் யூடியூப் எந்தளவு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பகுப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்!

"இந்தியாவில் `Positive' ஆன தாக்கங்களை ஏற்படுத்திய YouTube!" - Oxford Economics அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவில் யூடியூப் எந்தளவு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பகுப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்!

Published:Updated:
YouTube

ஒரு நாளில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலிகள் என்று ஒரு பட்டியலிட்டால், அதில் யூடியூப் கண்டிப்பாக ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்போடு, நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு செயலி யூடியூப். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்த்தால் இந்தியாவில் யூடியூப் பயன்பாடு பெரிய அளவில் கிடையாது. ஜியோவின் வருகைக்குப் பின்னர் தான் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது, அதன் பிறகு தான் யூடியூபின் பயன்பாடும் இந்திய மக்களிடையே கூடியது. இந்த நிலையில் இந்தியாவில், இந்திய மக்களிடம் யூடியூப் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக எந்தளவு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ் ( Oxford Economics) என்ற நிறுவனம் பகுப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

யூடியூப்
யூடியூப்

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, இந்திய மக்களிடையே மிகவும் பாஸிட்டிவ்வான ஒரு மனநிலையையே யூடியூப் உருவாக்கியிருக்கிறது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மிகவும் முக்கியமான ஒரு அம்சம் யூடியூபின் கிரியேட்டர் எக்கோசிஸ்டம் (YouTube Creator Ecosystem) பற்றியது தான். ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸின் அறிக்கையின்படி யூடியூப் கிரியேட்டர் எக்கோசிஸ்டம் மட்டும் 6,800 கோடி ரூபாய் அளவு 2020-ல் இந்தியாவின் GDP-க்குப் பங்களித்திருக்கிறது. யூடியூபில் காணொளிகளைப் பதிவிடும் போது அதன் தொடக்கத்திலும் இடையேயும் விளம்பரங்கள் காட்டப்படும். அந்த விளம்பரங்களின் மூலம் காணொளியைப் பதிவிடுபவர் பணம் ஈட்ட முடியும். இதோடு யூடியூப் காணொளிகளைத் தயாரிப்பதற்கென்று ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். இது போல நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவின் GDP-க்கு யூடியூப் கிரியேட்டர் எக்கோசிஸ்டத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருவாய் மட்டுமின்றி, 6.83 லட்சம் முழு நேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலைவாய்ப்புகளை இந்த யூடியூப் கிரியேட்டர் எக்கோசிஸ்டம் உருவாக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தைக் கடந்து, யூடியூப் தங்களின் வாழ்க்கையில் பல்வேறு வகையில் உதவுவதாகவும் இந்திய மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எந்தெந்த வகையில் எல்லாம் யூடியூப் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது?

18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 91 சதவிகிதம் பேர் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த கற்றலுக்கு யூடியூப் உதவியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் சுயமாக கற்பதற்கு யூடியூப் உதவிகரமாக இருப்பதாக 81 சதவிகிதம் ஆசிரியர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 13 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்க யூடியூப் பெரிய அளவில் உதவியாக இருப்பதாக, 91 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள்.

YouTube
YouTube

கல்வி மற்றும் கல்லூரி படிப்பைக் கடந்து சுயமாக தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள யூடியபையே பயன்படுத்துவதாக 98 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்றும் முடிந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவும், தொடக்கக் காலத்தில் ஈட்டி எப்படி எறிவது என்பதைக் கற்றுக் கொள்ளத் தான் யூடியூபையே பயன்படுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், உலக அளவில் ஈட்டி எறிதலில் முன்னணியில் இருக்கும் வீரர்களின் செயல்பாடுகளைப் பார்த்துக் கற்றுக் கொள்வதற்கும் யூடியூபே தனக்கு உதவியாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே யூடியூப் பயன்பாடு என்பது ஒரு பாஸிட்டிவ்வான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism