கட்டுரைகள்
Published:Updated:

திசைகள் நான்கைத் தீர்மானிப்பவர்கள்!

திசைகள் நான்கைத்  தீர்மானிப்பவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திசைகள் நான்கைத் தீர்மானிப்பவர்கள்!

12 வயதில் மென்பொருள் உருவாக்கத் தெரிந்த ஜீனியஸ். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது அந்த விடுதியில் உருவானதுதான் ஃபேஸ்புக்.

ந்த உலகை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள்தான் நிறைய மாற்றி வந்திருக்கிறார்கள். அறிவியல், கல்வி, அரசியல் என அந்தந்தக் காலத்தின் தேவைக்கேற்ப அந்தந்தத் துறையில் சில சூப்பர் ஸ்டார்கள் செய்த முக்கியமான விஷயங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது தொழில்நுட்பத்தின் காலம். டெக்னாலஜிதான் நம் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. அந்த டெக்னாலஜியில் “மத்தவங்க டான்… நாங்க டான்ன்ன்” என நான்கு பெருநிறுவனங்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யக் குறிப்புகள்.

ஃபேஸ்புக் - மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக் இல்லாமல் இந்த நாளை நினைத்துப் பார்க்க முடியுமா? அதன் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ மார்க் சக்கர்பெர்க். 12 வயதில் மென்பொருள் உருவாக்கத் தெரிந்த ஜீனியஸ். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது அந்த விடுதியில் உருவானதுதான் ஃபேஸ்புக். மார்க் மற்றும் அவர் காதலி பிரிசில்லா சான் திருமணம் ரகசியமாக நடைபெற்றது. ஒரு நாள், நெருங்கிய நண்பர்களை, ‘பிரிசில்லாவின் மருத்துவப் படிப்பு முடிந்தது. அதைக் கொண்டாடலாம் வாருங்கள்’ என வீட்டிற்கு அழைத்திருக்கிறார். வந்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அன்று நடந்தது மார்க் - பிரிசில்லா திருமணம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘பிரிசில்லா சானைத் திருமணம் செய்துகொண்டேன்’ என அப்டேட் செய்து, சிம்பிளாகத் தன் திருமணத்தை உலகிற்கு அறிவித்தார்.

திசைகள் நான்கைத்  தீர்மானிப்பவர்கள்!

திருமணத்தில் மட்டுமல்ல; தினசரி வாழ்க்கையில்கூட மிக எளிமையானவர் மார்க். அவர் தினம் அணிவது கிரே நிற டி-ஷர்ட், புளூ ஜீன்ஸ், நைக் காலணி. நேரம் மிச்சமாகும் என்பதே காரணம்.

மைக்ரோசாப்ட் - சத்ய நாதெள்ளா

ம் வாழ்க்கையில் கணினி தொடர்பாக நாம் முதலில் அறிந்த பெயர் மைக்ரோசாப்டாகத்தான் இருக்க முடியும். அதன் இன்றைய சி.இ.ஓ சத்ய நாதெள்ளா. சரிந்துகொண்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தைக் காப்பாற்ற 2014ஆம் ஆண்டு களமிறக்கப்பட்டார் சத்ய நாதெள்ளா. சத்யாவுக்கும் மைக்ரோசாப்ட்டுக்குமான உறவு 1992-ல் தொடங்கியது.

டெக்னாலஜி ராஜாவுக்கு இன்னொரு மென்மையான பக்கம் உண்டு. அது கவிதைகள். `கவிதைகள் புரொகிராமிங் கோட் போலதான். நிறைய பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்ல வேண்டும்’ எனச் சொல்லும் கவிதைப் பிரியர்.

திசைகள் நான்கைத்  தீர்மானிப்பவர்கள்!

“நான் படிப்பதைவிட அதிக புத்தகங்கள் வாங்குகிறேன். நேரமில்லை எனினும் பல ஆன்லைன் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கிறேன். ஏனெனில், கற்றுக்கொண்டே இருப்பது மட்டுமே மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன்” என்பவர், குடும்பம், ஆர்வம், அறிவுத் தேடல் இவை மூன்றுமே தன்னை வரையறுக்கும் என்கிறார். சமீபத்தில் ஆன்லைன் வழியே ‘நியூரோ சயின்ஸ்’ படித்திருக்கிறார் சத்ய நாதெள்ளா.

ஆல்ஃபபெட் இன்க் - சுந்தர் பிச்சை

லகம் இன்று அறிந்திருக்கும் முக்கியமான தமிழர். நம் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் நிறுவனத்தின் சி.இ.ஓ. சென்னையில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

திசைகள் நான்கைத்  தீர்மானிப்பவர்கள்!

சிறு வயதிலிருந்தே படிப்பில் கெட்டி. படுசுட்டி. ட்விட்டர், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களிலிருந்து சி.இ.ஓ ஆகும் வாய்ப்பு வந்தும் அதை மறுத்து, கூகுள் பிடிக்கும் என்பதால் விடாமல் பிடித்துக்கொண்டவர். கூகுள் அதற்கு பதில் மரியாதையும் செய்ததுதான் ஹைலைட்.

ஒரு பிரச்னை. பெரிய தலைகள் எல்லோரும் கூடியிருக்கிறார்கள். பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அங்கு சுந்தர் இருந்தால் திடீரென வெளியே சென்றுவிடுவாராம். பாதியில் போகிறாரே என வருந்த மாட்டார்கள். சந்தோஷப்படுவார்களாம். காரணம், சிறிது நேரம் நடந்துவிட்டு உள்ளே வரும்போது பிரச்னைக்கான தீர்வோடு வருவார் சுந்தர்.

திசைகள் நான்கைத்  தீர்மானிப்பவர்கள்!

ஜெஃப் பெஸோஸ் - அமேசான்

கொரோனாவெல்லாம் வருவதற்கு முன்னரே ‘ஏன் வெளிய வரீங்க? உங்களுக்கு வேண்டியதெல்லாம் வீடு தேடி வரும்!’ என நம்மை ஆன்லைன் ஷாப்பிங்கிற்குப் பழக்கப்படுத்தியது அமேசான். அந்த ஆன்லைன் அலாவுதீன் பூதத்தைக் கண்டறிந்தவர் ஜெஃப் பெஸோஸ். ஒரு டிரில்லியன் டாலர் மதிப்போடு உலகின் மிகப் பணக்கார நிறுவனமான அமேசான்-நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. உலகில் மனிதர்களே வாழக்கூடாது என்பது இவரது ஆசை. பயப்படவேண்டாம்... மனிதர்கள் விண்வெளியில் ஸ்பேஸ்ஷிப் காலனிகளில் வாசிக்கவேண்டும் எனவும், உலகை ஒரு தேசியப் பூங்காவைப்போலப் பாதுகாக்கப்படும் பொக்கிஷமாகப் பராமரிக்கவேண்டும் என்பதே இவரது கனவு. விண்வெளியில் வாழும் ஆராய்ச்சிகளுக்காக 2000ஆம் ஆண்டு ‘புளூ ஆரிஜின்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். 2015-ல், விண்வெளிப் பயணப் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்திருக்கிறது புளூ ஆரிஜின். விண்வெளியும், ஸ்டார் ட்ரெக் திரைப்படமும் ஜெஃப்-க்கு அவ்வளவு பிடிக்கும். ‘ஸ்டார் ட்ரெக் - பியாண்ட்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஏலியனாக நடித்திருக்கிறார் ஜெஃப்.