Published:Updated:

WhatsApp ஹேக் செய்பவர்களின் புதிய உத்தி; நீங்கள் இதைச் செய்யக்கூடாது!

WhatsApp  ஹேக்
News
WhatsApp ஹேக்

இந்த எண்களுக்கு அழைத்தால் அடுத்த நொடியில் இருந்து வாட்ஸ் அப் அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும்.

Published:Updated:

WhatsApp ஹேக் செய்பவர்களின் புதிய உத்தி; நீங்கள் இதைச் செய்யக்கூடாது!

இந்த எண்களுக்கு அழைத்தால் அடுத்த நொடியில் இருந்து வாட்ஸ் அப் அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும்.

WhatsApp  ஹேக்
News
WhatsApp ஹேக்

வாட்ஸ்அப் ஹேக் செய்பவர்கள் தங்கள் முறைகளையும் அப்டேட் செய்து வருகிறார்கள். இவர்களின் புதிய ஹேக் செய்யும் உத்தியைப் பற்றி cloudsek.com இணைய நிறுவனர் ராகுல் சசி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார்.

ஹேக்கர் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அழைத்து ஏதோ ஒரு ஆப்பர் அல்லது பரிசு என்கிற பெயரில் ஆசை காட்டி அவர்களை பின்வரும் இந்த எண்களுக்கு அழைக்க வைக்கிறார்கள். **67*<10 இலக்க தொலைபேசி எண்>, *405*<10 இலக்க தொலைபேசி எண்> பயனர்கள் ஹேக்கர்கள் சொல்வது போல இந்த எண்களுக்கு அழைத்தால் அடுத்த நொடியில் இருந்து வாட்ஸ்அப் அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். எப்படி சாத்தியமாகிறது இது.

மேலே சொன்ன இரு எண்கள் ஜியோ மற்றும் ஏர்டெல்லில் "கால் பார்வேர்டிங்" வசதிக்கான கோரிக்கை விடுக்கும் எண்கள். இந்த கால் பார்வேர்டிங் வசதி உங்களுக்கு வருகிற அழைப்புகளை நீங்கள் பிஸியாக இருக்கும்போது கொடுக்கப்பட்ட எண்ணுக்கு திருப்பி அனுப்பும்.

வாட்ஸ்அப் செயலியைப் புதிதாக நீங்கள் ஒரு மொபைலில் ஓபன் செய்யும் போது OTP கேட்கும். இந்த OTP-ஐ குறுஞ்செய்தி வழியாகவோ போன் அழைப்பின் வழியாகவோ பெற முடியும். உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே பின்னால் இந்த வேலைகள் நடந்துவிடும். அதன் பிறகு முழு கட்டுப்பாடும் ஹேக்கர்களுக்குச் சென்றுவிடும்.

இந்த ஹேக்கை உலகம் முழுவதும் செய்ய முடியும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கிருக்கும் மொபைல் நிறுவனங்கள் இதுபோல `கால் பார்வேர்ட்' வசதிக்கான நம்பர் வைத்திருப்பார்கள். கவனமாக இருப்பது அவசியம்!