Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷிவானி, சம்யுக்தா, ரம்யா பாண்டியன்
ஷிவானி, சம்யுக்தா, ரம்யா பாண்டியன்

ஷூட்டிங் குறித்த நேரத்தில் முடியாமல் இரவு வரை நீடித்தால், பொதுவாக எல்லா நடிகைகளுமே கோபப்படுவார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

பிக் பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டது முதல் ஷிவானி, சம்யுக்தா, ரம்யா பாண்டியன் மூவரும் நெருக்கமாகப் பழகியதுடன், சோஷியல் மீடியாவில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், இப்போது மூவருக்குமிடையில் என்ன பிரச்னையோ, பரஸ்பரம் ‘அன் ஃபாலோ’ செய்து விட்டார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

`சர்வைவர்' நிகழ்ச்சி குறித்து அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கலைவாணி என்கிற லேடி காஷ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளை சேனல் கண்டுகொள்ள வில்லை. உடல்நலன் சார்ந்த சில பிரச்னைகள் காரணமாகவே அவர் வெளியேறியதாகச் சொல்லும் சக போட்டியாளர்கள் சிலர், ‘‘அதே பிரச்னையில்தான் இந்திரஜாவும் வெளியேறினார், இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையோ சேனலையோ குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை’’ என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான `வள்ளி' சீரியல் வித்யா மோகனுக்கு நல்ல பெயரைத் தந்திருந்த நிலையில் தற்போது `அபியும் நானும்' தொடருக்கும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு. விளைவு, இப்போதைய சீரியல் நடிகைகளிலேயே கணிசமாக சம்பளம் வாங்குபவர்களின் லிஸ்ட்டில் வித்யாவின் பெயரும் இருக்கிறது. அதுகுறித்துக் கேட்டால், ‘`நான் வாங்குற சம்பளத்தை ஏன் கேக்கறீங்க, என் சம்பாத்தியத்துல நிறைய பேருக்கு உதவிகள் செய்றேனே, அதைப் பத்திக் கேக்க மாட்டீங்களா?'’ எனக் கோபித்துக் கொள்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷூட்டிங் குறித்த நேரத்தில் முடியாமல் இரவு வரை நீடித்தால், பொதுவாக எல்லா நடிகைகளுமே கோபப்படுவார்கள். ஆனால் சீரியல் ஏரியாவில் ஸ்ரீத்திகாவுக்கு மட்டும் இந்த விஷயத்தில் ரொம்பவே நல்ல பெயராம். ஷூட்டிங் தாமதமானால், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் யூனிட்டிற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாராம் இவர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘`கொரோனா நேரத்தில் நடிக்க வரத் தயங்கியதற்காக `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலிலிருந்து தூக்கிவிட்டார்கள்'’ எனக் குமுறிய ரக்‌ஷா ஜீ தமிழ் சேனலில் அடுத்த சில தினங்களில் தொடங்கவிருக்கும் `அன்பே சிவம்' தொடரில் கமிட் ஆகியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

திருமணமாகி ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட சூழலில், அந்தத் தொகுப்பாளினியின் கணவர் வீட்டில் வாரிசை எதிர்பார்ப்பதாக வாய்விட்டே கேட்டுவிட்டார்களாம். தொகுப்பாளினியோ, `இப்பதான் ஃபீல்டுல பிஸியா இருக்கேன், பார்க்கலாம்' எனச் சொல்லியிருக்கிறார். கணவர் வீட்டில், `இது நல்லதுக்கில்ல, எங்க போய் முடியுமோ' என்கிறார்கள். தொகுப்பாளினியும் கணவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் இப்போது பரஸ்பரம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு