Published:Updated:

``பெரிய படம் கிடைக்கணும்னா அட்ஜஸ்ட் பண்ணணும், டி.வி ஷோ-னா BAR-க்குப் போகணுமா?!'' - நடிகை கல்யாணி

சினிமா, டி.வி என இரண்டு மீடியாக்களிலும் தன்னைத் தவறான பார்வையுடன் அணுகினார்கள் என குற்றம் சாட்டியிருக்கிறார் கல்யாணி.

’’சினிமால அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு நோ சொல்லிட்டு டி.வி-க்குப் போனேன். அங்க ஒருத்தன் சீண்டினான். ’போங்கடா’ன்னு இந்த ரெண்டுக்குமே டாடா காட்டிட்டு பிரிட்டனுக்கு வந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. ஏற்கெனவே இந்த வருஷத்துடன் இந்தியா திரும்பிடணும்னு முடிவு செஞ்சிருந்தோம். இப்ப கொரோனா வேற வந்திடுச்சா, அதனால 2021 ஜனவரில நிச்சயம் இந்தியாவுல இருப்பேன்.’’

படபடவெனப் பேசுகிறார் நடிகை கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஆங்கரிங், சீரியல், சினிமா என மீடியாவில் பிரபலமான கல்யாணி, இப்போது கல்யாணமாகி கணவருடன் இங்கிலாந்தில் குடியேறியிருக்கிறார்.

கல்யாணி
கல்யாணி

‘’சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா இருந்த வரை விளையாட்டாப் போயிடுச்சு. ஆனா ‘நீங்கதான் ஹீரோயின்’னு சொல்லி வந்தாங்க பாருங்க. அங்க இருந்துதான் வினை ஆரம்பமாச்சு. ’ஆஹா நாமளும் ஹீரோயினா’னு சந்தோஷத்துடன் போய் நடிச்சுக் கொடுத்தா, ஷூட்டிங்கின்போது ஒரு ஆங்கிள்ல படம் எடுத்தாங்க. படம் வெளியானதும் பார்த்தா வேற மாதிரி காட்டியிருந்தாங்க. சினிமான்னா இப்படியெல்லாம்கூட இருக்குமான்னு அன்னைக்குத் தோணுச்சு. அடுத்து சிலர், ‘பெரிய பேனர் பட வாய்ப்பு இருக்குமா... ஆனா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடிக்கணும்’னு சொன்னாங்க. எனக்கு அதோட அர்த்தம் புரிஞ்சது. முடியாதுன்னு சொல்லிட்டு டி.வி பக்கம் போனேன்.

அங்கேயும் அதே டைப் அட்ஜெஸ்ட்மென்ட் ஆசாமிகள்தான். ‘இந்தச் சேனல்ல அடுத்து நீங்க என்னென்ன ஷோ பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணலாம். பார்ல போய் பேசலாமா'னு கேட்டா, அர்த்தம் புரியாம இருக்குறதுக்கு நானென்ன அவ்ளோ அப்பாவியா?

`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என்கிட்டதான் கொடுத்தார்... ஆனா?!'' - பார்த்திபன் தொடர் - 2

இதென்ன இங்கயும் இதே கொடுமையான்னு யோசிச்ச சூழல்லதான் என்னுடைய கணவருக்கு நல்ல ஒரு உத்தியோகம் லண்டனுக்குப் பக்கத்துல கிடைச்சது. சினிமா, டெலிவிஷன் முக்கியம்னா நீ இங்கயே இரு; நான் மட்டும் போறேன்னு சொன்னார் அவர். அந்த நிமிஷம், கணவர் தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு கஷ்டப்படற மாதிரி ஒரு சீன் என் மனசுல ஓடுச்சு. இங்க நான் ஒவ்வொருத்தரா நோ சொல்லிகிட்டே இருந்து சமாளிக்கறதுக்குப் பதிலா ஃபேமிலி லைஃபை என்ஜாய் பண்ணலாமேன்னு ஃபைனல் பண்ணிட்டுக் கிளம்பிட்டேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

" 'மீ டூ' மூவ்மென்ட் தீவிரமா இருந்தப்ப, உங்ககிட்ட தவறான நோக்கத்துடன் வந்தவங்களை அடையாளம் காட்டியிருக்கலாமே... ஏன் அமைதியா இருந்துட்டீங்க?''

`அட்ஜஸ்ட் பண்ணறீங்களா’னு எங்கிட்ட கேட்டவங்க பெயரைச் சொல்றதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எந்தப் பயமும் கிடையாது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை எனக்கு முழு சப்போர்ட்ங்கிறதால என்னுடைய ஃபேமிலியிலயும் அது எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கப் போறதில்லை. ஆனா, சம்பந்தப்பட்ட ஆளுங்களுக்கு மனைவி, குழந்தைகள் இருக்காங்களே, அவங்க என்ன தப்பு செஞ்சாங்க? அவங்களோட லைஃப் கூட சேர்ந்து பாதிக்கப்படுமேன்னுதான் நான் பெயரை வெளியிட வேண்டாம்னு முடிவுசெஞ்சேன். என்னுடைய இந்த பேட்டியைப் படிக்கிறப்ப சம்பந்தப்பட்ட அந்த நபர்களுக்கு நிச்சயம் உறுத்தும்ல, அதுவே எனக்குப் போதும்.

கல்யாணி
கல்யாணி

’’மறுபடி ஏன் இந்தியா திரும்பணும்கிற முடிவு?''

‘’இங்கேயே செட்டில் ஆக முடியுமாங்க. அப்பா அம்மா, சொந்தக்காரங்கன்னு எல்லாரும் எங்க இருக்காங்களோ அங்கதான செட்டில் ஆக முடியும். ஒரு வேலைக்காக வந்தோம். அடுத்தடுத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கி நகர்றதுதானே வாழ்க்கை. இந்தியா வந்ததும் பழையபடி, டி.வி, சினிமான்னு இன்னொரு ரவுண்டு வரணும்கிறதுதான் என்னுடைய ஆசையும். அப்பவாச்சும் பழைய கசப்பான அனுபவங்கள் இருக்காதுனு நம்பறேன். பார்க்கலாம்’’ என்கிறார் கல்யாணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு