எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன் | Interview - Beyond Words - K Balamurugan | விகடன் தடம்

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

சக்தி அருளானந்தம்

`` `எமக்குத் தொழில் கவிதை’ எனப் பெருமிதமாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் தமிழ்ச்சூழல் இல்லை. பெரும்பான்மையோர் எழுத்து வாழ்வை நகர்த்த ஏதோ ஒரு பணியில் இருக்கின்றனர். நானும் அப்படியே. அப்பா, ரஷ்ய சிறுவர் இலக்கியப் புத்தகங்களை வாங்கித் தந்து உற்சாகப்படுத்தினார். அந்தச் சிறுவயது வாசிப்புப் பழக்கமே என்னை எழுதத் தூண்டியது.’’

சேலத்தில் மிக்ஸி, அயர்ன் பாக்ஸ், குக்கர், கேஸ் ஸ்டவ் போன்றவற்றைப் பழுதுநீக்கும் கடை வைத்திருக்கிறார் சக்தி அருளானந்தம்.  ‘இருண்மையிலிருந்து...’, ‘பறவைகள் புறக்கணித்த நகரம்’ என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நல்ல ஓவியரும்கூட. திரை இசை கேட்பதில், பயணிப்பதில், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். முகநூலில் இவருடைய கவிதைகளையும் ஓவியங்களையும் பதிவிட்டுவருகிறார்.

குமார் அம்பாயிரம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick