தலையங்கம் | Editorial - Vikatan Thadam | விகடன் தடம்

தலையங்கம்

காதிபத்தியக் கருத்தியலுக்கு எதிரான சர்வதேச அரசியல் அடையாளமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு விகடன் தடம் தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.

எம்.ஜி.ஆர். தமிழ் சினிமா, தமிழக அரசியல், இரு துறைகளிலும் வலுவாகத் தடம் பதித்த ஆளுமை. அடித்தட்டு மக்களிடம் ஒரு நம்பிக்கைக்குரிய தொன்மமாகவே பதிந்துவிட்டவர். பிறக்கவிருக்கும் அவரது நூற்றாண்டில் ஒரு உரையாடலைத் தொடங்குவது அவசியம் என முன்மொழிகிறது  விகடன் தடம்.

நவீன ஓவிய வெளியின் ‘மாஸ்டர்’ சந்ருவுடனான நேர்காணல், தமிழ் மொழி தொடர்ந்து எதிர்கொள்ளும் போராட்டம் குறித்த நக்கீரனின் பார்வை, ஃபிடல் காஸ்ட்ரோவின் இலக்கிய முகத்தை அறிமுகம்செய்யும்
எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை, தனது வாத்தியார் சுகுமாரன் உடனான நட்பைப் பகிர்ந்துகொள்ளும் இசையின் பதிவுகள், ந.முத்துசாமி, வீ.அரசு, அ.முத்துலிங்கம், சி.மோகன், ரவிக்குமார், கே.ஏ.ஜோதிராணி, ஜீ.முருகன், லிபி ஆரண்யா ஆகிய ஆளுமைகளின் குரலோடு தொடர்கள், கதைகள் கவிதைகள் என, உங்களுக்கான தேடல் மிகுந்த பயணத்தில் இணைகிறோம். 

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick