நட்சத்திரங்களை எண்ணும் பெண் - நேசமித்ரன் | Tamil Poetry - Nesamithran - Vikatan Thadam | விகடன் தடம்

நட்சத்திரங்களை எண்ணும் பெண் - நேசமித்ரன்

ஓவியம் : ஹாசிப்கான்

பிசகி ஏறிய முள்ளுடன்
நீரில் வீழும் பாம்பின் உடல்மொழி
முழுநிலா பார்த்துப் பேசும்
ஓநாயின்
குரல்பாதையை ஒத்திருக்கிறது.

வெள்ளம் வந்த நகரத்தில்
மிதக்கும் சர்க்கஸ் கூடாரத்தின் கீழ்
நீந்தத் தெரிந்த மிருகம் உள்ள கூண்டு
மெல்ல மூழ்கியபடி

ஸ்டெம் செல் வங்கியின் வாசலில்
பதனத் தைலமிடப்பட்ட
மௌனத்திடம் கதைத்தபடி
மேகங்களை எண்ணுகிற ஆட்டிசப் பிச்சியின்
கடைவாயொழுகும் நீர் சொட்டுகிறது
தொப்புள் கொடி
அடைத்துச் செய்த தாயத்தின் மீது

இறுதிநாள் அடைக்குப் பின்
தன்னைக் கொத்தித் திறக்கும்
அலகின் மீதான காத்திருப்பிலிருக்கிறது
இன்னும் ரோமம் முளைக்காத பறவை

ஒலிவாங்கியின் முன் நின்று
புகைத்துக்கொண்டிருக்கிறான்
ஊமை பார் ஊழியன்
தன் பாடலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick