கால யந்திரம் - குமாரநந்தன்

நடந்தவற்றை ஒரு கதையாகச் சொல்ல
அவன் தயாரானான்
அவள் அதை மறுத்துவிட்டாள்
அவற்றை ஒரு சிறு நாடகமாக நடத்திக்காட்ட எழுந்தான்
அவள் ஆர்வத்தைக் கைவிட்டாள்
ஒரு கவிதை சொன்னான்
ஒரு மேற்கோள்
ஒரு சொலவடை
அவன் அறிவை அவள்
வேடிக்கைபார்த்தாள்.
நிலமை மிகவும் மோசமாகிவிட்டது
இனி ஒரு முத்தத்தால்
அல்லது ஒரு கலவியால்கூட அவளை மீட்டெடுக்க முடியாது
நந்தவனப் பூக்கள் என்னதான் நடக்கும் என
அமைதியாய் இருந்தன
காலம் ஓர் யந்திரமாகி அங்கு நின்றது
அவளை அவனிடமிருந்து அது எடுத்துச் சென்றது
மலர்களோடு சேர்ந்து அவனும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick