பாடல் - அண்டோனியோ ஜோஸ் போண்ட்

தமிழில்: ரவிக்குமார்

கோடைக்காலம் முழுவதும்
அந்த இசைத்தட்டைக் கேட்பதிலேயே செலவிட்டேன்
அந்த உணர்வு விலகிவிடக் கூடாது என்பதற்காக
தினம் ஒருமுறை அதைக் கேட்டேன்
பசி எடுத்தபோது நடப்பதற்குப் போனேன்

ஒளி தன்போக்கில் அந்தப் பாடலைப் பாடியது
கடல் அதைப் பாடியது, ஒரு பறவை அதைப் பேசியது
ஒரு கணம் நினைத்தேன்: இதெல்லாம் நடக்கிறதென்றால்
நான் காதலில் வீழ்ந்திருக்கவேண்டும்

கோடை போனது
மரக்கிளையைவிடவும் காய்ந்துபோய்க்கிடந்த
அந்தப் பறவை
தனது அலகை மீண்டும்
திறக்கவே இல்லை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick