செப்டம்பர் 11ல் எடுத்த புகைப்படம் - விஸ்லவா ஸிம்போர்ஸ்கா

தமிழில்: ரவிக்குமார்

ரிந்துகொண்டிருக்கும் மாடியிலிருந்து அவர்கள் குதித்தார்கள்
ஒன்று, இரண்டு, மேலும் சில
உயரே கீழே

புகைப்படம் அவர்களை உயிருடன் அப்படியே நிறுத்திவைத்திருக்கிறது
பூமிக்கு மேலே பூமியை நோக்கி

ஒவ்வொன்றும் பூரணமாக இருக்கிறது
குறிப்பிட்ட ஒரு முகத்துடன்
மறைக்கப்பட்ட ரத்தத்துடன்

நேரம் ஏராளமாக இருக்கிறது
கேசம் அவிழ்வதற்கு
சாவிகளும் நாணயங்களும்
சட்டைப்பையிலிருந்து விழுவதற்கு

அவர்கள் இன்னும் காற்று எட்டும் தூரத்தில்தான் இருக்கிறார்கள்
சற்றுமுன்னர் திறந்துகொண்ட இடங்களைக்காட்டும்
திசைமானியின் பார்வைக்குள்தான் இருக்கிறார்கள்

நான் அவர்களுக்காகச் செய்யக்கூடியவை இரண்டு விஷயங்கள்தான் -
இந்தப் பறத்தலை விவரித்தல்
கடைசி வரியை எழுதாமல் இருத்தல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick