திருமதி - பா.திருச்செந்தாழை

சி.பாலசுப்ரமணி

ற்கொலைக்குப் பின்

புழக்கமற்ற

சசிதரன் வீட்டு பகல்முற்றத்தில்

இரக்கமற்ற சிறிய பறவைகள்

மீண்டும் `பசி’ `பசி’யென

மென்னுடல் அதிர கீச்சிடுகின்றன...

தனிமையின் குளிர் உறைந்த

பாழ் அறைகளுக்குள் செல்லும்

கண்களற்ற கீச்சுகளுக்கு

பேரலறலாய் ஓர் எதிர் ஒலி

தானியங்களை விசிறுகிறது...

ஆறுதலாய் அவற்றைக் கொத்துகின்ற

அப்பறவையின் கண்களை

நான் அப்பொழுது பார்க்கவில்லை...

தா

நடுத்தர வயது..

நடுத்தர வயது என

தன்னுள் ஜெபித்தபடியிருப்பவளுக்கு

மீதி சில்லறைக்குப் பதிலென

ஒரு ஸ்ட்ராபெர்ரி சூயிங்கத்தை

கையளிக்கும் சிறுவனே...

மெளனமாக முதுகாட்டி செல்லும் அவளுள்

எத்தனை இளஞ்சூரியனை..

எத்தனை திசம்பர் பூக்களை...

எத்தனை கேவல்களை...

இனிப்புத்தோல் துண்டாக்கி

நீ அளித்திருக்கிறாயென அறிவாயா...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick