துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன் | Essays - Rusted Nails & Old Boxes - K Muralidharan - Vikatan Thadam | விகடன் தடம்

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தேவதைக் கதைகளில் எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கும். ஒரு துருப்பிடித்த ஆணியை, இளவரசன் சுவற்றில் இருந்து பிடுங்கினால் போதும்... எல்லோருக்கும் சாபவிமோசனம் கிடைத்துவிடும். ஆனால், நிஜத்தில் அப்படியா நடக்கிறது?

2012-ம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் `தி கார்டியன்’ நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, கதை கேட்ப வர்களிடமும் சொல்பவர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, இதுவரை எழுத்தில் வந்திராத சுமார் 500 மந்திரக் கதைகள் (Fairy tales) கிடைத்திருக்கின்றன என்பதுதான் அந்தச் செய்தி. 19-ம் நூற்றாண்டில், ஃபிரான்ஸ் சேவியர் வோன் சோன்வெர்த் (1810-1886) என்ற ஒருவர் பவேரியாவில் வாழ்ந்துவந்தார் (பவேரியா தற்போது ஜெர்மனியின் ஓர் அங்கமாக இருக்கிறது). பவேரிய ராஜாங்கத்தில் அரசன் இரண்டாம் மக்ஸிமிலனின் அந்தரங்கச் செயலராக இருந்தவர், பிறகு அந்நாட்டின் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்தார். இந்த மனிதருக்கு நாட்டுப்புறவியலில் பெரும் ஆர்வம் உண்டு. இதனால், அவர் அப்பகுதி மக்களின் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களைத் திரட்டி, ஒரு புத்தகமாக வெளிட்டார். ஒருவரும் படிக்கவில்லை. மனிதர் மனம் தளராமல், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் புழங்கும் வாய்மொழிக் கதைகளைத் தொகுக்க ஆரம்பித்தார்.

தறிநெய்பவர்கள், கொல்லர்கள், விவசாயிகள் என நூற்றுக்கணக்கான வர்களிடம் பேசி அவற்றைத் தொகுத்தார். ஆனால், பதிப்பகங்கள் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதனாலோ, என்னவோ அந்தக் கதைகளைப் பதிப்பிக்காமலேயே இறந்துபோனார் சோன்வெர்த். அந்தக் கதைகளின் கதி என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், எரிகா ஐஷன்ஷீர் என்ற முன்னாள் ஆசிரியை, சோன்வெர்த் இப்படி கதைகளைத் தேடித் திரிந்து தொகுத்ததை அறிந்துகொண்டார். அவரது தேடல் ஜெர்மனியில் இருக்கும் சிறு நகரமான ரோகன்ஸ்பர்கில் இருக்கும் நகராட்சி அலுவலத்தின் ஆவணக் காப்பகத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. ரோகன்ஸ் பர்க் ஆவணக் காப்பகத்தில் திறக்கப்படாமலேயே இருந்த 30 அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்து எரிகா ஐஷன்ஷீர் திறந்தார். அவர் அந்தப் பெட்டிகளைத் திறந்தபோது, பாழடைந்த குகையில் இருந்த துருப்பிடித்த ஆணியை இளவரசன் பிடுங்கினான். ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கதைகளுக்கு சாபவிமோசனம். இது நடந்தது 2009-ம் ஆண்டில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick