பல்கலைக்கழகம் என்பது... - அ.மார்க்ஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

“மனித வளத் துறை சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவிலேயே சிறந்த ஐந்து பல்கலைக்கழகங்களில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகமும் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களையும் மூட வேண்டும் என இன்னொரு பக்கம் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஷெஹ்லா ரஷீத் பேசியிருந்தார். இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர்.

இது மிகப் பெரிய முரண். ஆனால் யோசித்துப்பார்த்தால், எந்தக் காரணங்களால் இந்தப் பல்கலைக்கழகங்கள் முதன்மையாக விளங்குகின்றனவோ, அதற்கு அடிப்படையாக இருப்பவைதான் இவற்றை மூட வேண்டும் எனச் சொல்கிறவர்களின் கண்களை உறுத்துபவையாகவும் உள்ளன.
ஏராளமான ஆய்வுகள் வெளிவருவது, இந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து படிப்பை முடித்துச் சென்றவர்கள் உலகெங்கிலும் முக்கியப் பொறுப்புகளில் விளங்குவது ஆகியவற்றின் அடிப்படையில்தான்,  இவை முதன்மையான பல்கலைக்கழகங்கள் என மதிப்பிடப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick