மகத்தான நீர்க்காக்கை - கண்ணகன்

னக்குத்தானே கேள்விகள் கேட்டு
தனக்குத்தானே பதில்கள் சொல்லி
தன்னோடு தான் பேசி
ஒரு நீர்க்காக்கையின் வாழ்க்கை வேட்டையைப்போல
தானே சிரித்துக்கொண்டிருக்கும் கவிஞனின் இருப்பு
அவ்வளவு மகத்தானதில்லைதான்.

உதய பருவத்தில்
நதி மீண்டொரு கிளைநின்று
அகலச் சிறகுகள் விரித்து
நீண்டு மெலிந்த கழுத்து நிமிர்த்தி
சிறகுகள் உலர்த்தும்
சிலுவைப் பேரழகில்...

உள்நீச்சலில் நதிமேலிடும்
சாகசக் குறிப்புணர்த்தலில்...

சிறகுகள் முடக்கிக் கால்களால் நீந்தி
கழுத்தளவு வெள்ளம் காட்டும்
காட்சிப் பிழையில்...

ஒரு நீர்க்காக்கையின் வாழ்க்கை வேட்டையைப் பற்றி
எவரிடமும் கேட்காமல்

தனக்குத்தானே கேள்விகள் கேட்டு
தனக்குத்தானே பதில்கள் சொல்லி
தன்னோடு தான் பேசி
தானே சிரித்துக்கொண்டிருக்கும் கவிஞனின் இருப்பு
அவ்வளவு மகத்தானதில்லைதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick