கவிதை - குமரகுருபரன் | Poetry - Kumarakurubaran - Vikatan Thadam | விகடன் தடம்

கவிதை - குமரகுருபரன்

றந்துபோவதைப் பற்றி
யோசிக்காத ஒருவரேனும் இருந்தால்
உயிர்வாழ்வதைப் பற்றிப் பேசலாம்.

அவ்வளவு துயரம் உயிரோடிருப்பது
என்பதைச் சொல்ல ஆசைப்படும் எவனும்
இறக்கும் வரை அதை மூச்சுவிடுவதில்லை.
இறந்துபோவதன் உச்சநிலையை
சொல்வதற்கு இறந்துபோனவனே
தேவைப்படுகிறான்

இறந்துபோனவனைப் புகழ்வதில்
இறந்துபோன இதிகாசத்தை உயிர்ப்பிப்பதில்
இறந்துபோன தத்துவங்களை கொடியேற்றுவதில்
இறந்துபோன பழக்கவழக்கங்களைப் பேணுவதில்

இறந்த மூங்கில் துளைகள் இசைக்கும் காற்றென

இறப்பை ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள் யாரும்.

உயிரோடிருப்பதற்கான ஆகமங்கள்
எவரிடமும் இல்லை.

தவிர,

உண்மையிலேயே
யாரும் உயிரோடு இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick