வளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் ஓவியம்: ஹாசிப்கான்

பிளிறலும் கனைத்தலும் அகவலும் குரைத்தலுமாக பத்துவித ஓசைகளை எழுத்தில்லா ஓசைகளெனத் தமிழ் நிகண்டுகள் சொல்கின்றன. சொல்லால் வார்த்தெடுக்க முடியாத ஓசைகள் இவை. எழுத்தில்லா இந்த ஓசைகளின் எண்ணிக்கை பத்துதான். ஆனால், எழுத்தில்லா கதைகளின் எண்ணிக்கை எத்தனையிருக்கும்? பத்தாயிரம்? பலபத்தாயிரம்? கணக்கேதும் உண்டா?

கதைகள் எழுத்தில் இருந்து உருவானவை அல்ல. எழுத்து உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானவை. கடல்நீர், நன்னீராக இருந்த காலத்திலிருந்து தொடங்கியவை. உப்பின் சுவை, நீருக்குள் சூல்கொண்டதைப் பற்றி பழங்கதையொன்று பேசுகிறது.

மீனின் செதில்களின் வழியே வெளியேறிய நீர்த்துளி நமது உள்ளங்கையில் உப்புக்கல்லாய் இருப்பதைப்போலத்தான் கதைகள் எழுத்துக்களாய் காணக் கிடைக்கின்றன. கதையின் கதை வசீகரமானது. அதுவும் வரலாற்றின் கிளைகளில் தொற்றியுள்ள கதைகளுக்கு ஆற்றல் அதிகம். அவை எந்த வரலாற்றின் மீது அமர்ந்துள்ளனவோ, அதையே தலைகீழாகப் புரட்டிப்போடும் வல்லமைமிக்கவை. இந்தத் தொடர், வரலாற்றின் மீது கண்ணுக்குத் தெரியாமல் சொருகிக்கிடக்கும் கதைகளின் கதையைப் பற்றியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick