"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே?” - சுபகுணராஜன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வடிவேலு - நகைச்சுவையின் நிகழ்காலத் தொன்மம்ஓவியம் : கார்த்திகேயன் மேடி

மிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்ற கருத்து சிலரால் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அது, தங்களை அதி தீவிரக் கருத்தியல்வாதிகளாகவும், மிகத் தீவிரச் செயல்பாட்டாளர்களாகவும் கருதிக்கொள்பவர்களுடைய அரிய கண்டுபிடிப்பு. இந்த நகைச்சுவை உணர்வை, தர நிர்ணயம்செய்ய உதவும் தரவு எது? சந்தேகத்துக்கு இடமின்றி, தமிழ் சினிமா எனும் கருவூலம்தான்.

 தமிழ் சினிமா, தமிழர் வாழ்வுடன் ஊடாடும் வெளி மிகவும் நுட்பமானது;  ஆழமானதும்கூட.  இரண்டு தமிழர்கள் பேசிக்கொள்கிறார்கள், அவர்களுடைய பேச்சின் பத்தாவது நிமிடத்துக்குள்ளாக, தமிழ் சினிமா பற்றிய தகவல் ஒன்று குதித்துவிடவில்லை என்றால், அவர்களின் ‘தமிழ்த்தனம்’ சந்தேகத்துக்கு உரியதாகிவிடும். இதில் ஆண் - பெண் - மூன்றாம் பாலினம் என்ற பாகுபாடுகள் இல்லை. ஆனால், பீட்டர்களும் அறிவுஜீவிகளும் சேர்த்தி இல்லை. அவர்களின் தரவு அவர்களே பார்த்திராத, கேள்வி வழியாக மட்டும் அறிந்த உலக சினிமாவாக இருக்கும். வளர்பருவத்தில் அக்காமார், அத்தாச்சிமார் உரையாடல்களில், ‘காலம்’ தொடர்ந்து சினிமா வழியாகவே அடையாளப்படுத்தப்படும். உதாரணத்துக்கு, ` ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரிலீஸ் அன்னைக்குதான் மலர் பிறந்தா’, 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick