“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்!” - பிரபஞ்சன் | Death of strong critics in Today's Literature - Prabhanjan - Vikatan Thadam | விகடன் தடம்

“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்!” - பிரபஞ்சன்

நேர்காணல்சந்திப்பு: தமிழ்மகன், வெய்யில் படங்கள்: மீ.நிவேதன்

ன்னம்பிக்கை மிளிரும் குரல், இளைஞனென்று தன்னை முழுமையாக நம்பும் உடல்மொழி, நேர்த்தியான உடை, தெளிவான உரையாடல்...உற்சாகமாக இருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

ஒரு பேச்சுலர் அறைக்கே உரித்தான சகல அம்சங்களோடும் இருந்தது, திருவல்லிக்கேணி மேன்ஷன் அறை. புத்தகங்களுக்குப் போக மீதமிருக்கும் இடத்தில் அமர்ந்திருக் கிறார். மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்கிறது. தெருவில் ஒரு பெண் ஏதோவொன்றை விற்க கூவிக் கொண்டு போகும் சத்தம்... சற்று காது கொடுத்துவிட்டு,  ஒரு புன்னகையுடன் தயாராகிறார்.

``ஒரு நூற்றாண்டை முழுமைசெய்திருக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``தமிழ்ச் சிறுகதைகள் பாரதியில் இருந்துதான் தொடங்குகின்றன என்பது என் கருத்து. வ.வே.சு அய்யர்கூட அதே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதினார் என்றாலும், சிறுகதை என்று சொல்ல முடிகிற தகுதி, பாரதியின் கதைகளுக்குத்தான் உண்டு. பின்னாட்களில் வ.வே.சு அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ தாகூர் கதையின் தழுவல் என்று நிரூபிக்கப்பட்டது. இலக்கிய வடிவங்களிலேயே மிகச் சவாலானது, சிறுகதை வடிவம்தான். சிறுகதை என்கிற வடிவம் எழுதவும் சரி; வாசிக்கவும் சரி; எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. பாரதி தொட்டு இன்று வரைக்குமான சிறுகதைகளின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியம், உலக இலக்கியத்துக்கு வழங்கியிருக்கும் சிறந்த பங்களிப்பு என்று நமது சிறுகதைகளைச் சொல்ல முடியும். சுந்தர ராமசாமி சொல்வதுபோல நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளுமைகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் தமிழில் சிறுகதைகள் எழுதப்பட்டிருக் கின்றன. ஆனால், உலக மொழிகளில் இருந்து தமிழுக்கு கதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அளவுக்கு, தமிழ்ச் சிறுகதைகள் மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. இது தமிழ்ச் சிறுகதைகளுக்கு நிகழ்ந்த மிகப் பெரிய சோகம். நீண்ட காலமாகவே எனக்கு இந்த மனக்குறை உண்டு.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick