நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது - கவிதை - கே.என்.செந்தில் | Day of Falling stars - Poetry - K.N.Senthil - Vikatan Thadam | விகடன் தடம்

நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது - கவிதை - கே.என்.செந்தில்

ச்சையிலிருந்து சிவப்புக்கு

மாறுகிறது - பதிமூன்றாவது சுற்றில்

வென்றுவர அறுபது வினாடிகள்

அவருக்கு ஒதுக்கப்படுகிறது.

துழாவி நகர்ந்து எரிச்சல் முகங்களின்

இடையே

அந்தப் பார்வையற்றவர் வான் நோக்கி

குழிந்திருந்த துண்டை ஏந்தியபடி

வறண்ட சாரீரத்தில்

“காணா இன்பம் கனிந்ததேனோ...”

பாடுகிறார் – வரிகளினிடையே நட்சத்திரங்கள்

குட்டிக்கரணம் அடித்து விழுகையில்

கூப்பிய கரங்களுடன் ஹாரன்களுக்கு வழிவிட்டு

மரத்தடிக்கு நகர்கிறார் - கடவுள்

கிளைகளை அசைக்க பழுப்பு இலைகளும்

பூக்களும் உதிர்கின்றன அந்த நட்சத்திரங்களின் மீது.

பதினான்காவது சுற்றுக்குள் நுழையும் முன் - விநாடிகள்

அறுபதிலிருந்து தொண்ணூறுக்கு மாறியிருக்கிறது.

கடவுளால் செய்யக்கூடியதெல்லாம்

அவ்வளவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick