எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...படம்: வீ.சதீஷ்குமார், வீ.சக்தி அருணகிரி, ரா.ராம்குமார், உ.கிரண்குமார்

ந.ஜயபாஸ்கரன்

“பாத்திரங்களை அடுக்கி வரிசைபோடுவதுபோல் வார்த்தைகளை அடுக்கி வரிசைபோடுவதையே நான் கவிதையாகச் செய்கிறேன். ஆசையின் அமிலமும் காரமும் தடவிச் செரிக்கின்ற பாத்திரங்களை, வர்ணமற்ற துணியில் சதா துடைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆதியில் இருந்து எனக்குப் பிடித்த வண்ணமாக இருப்பது உலோக மஞ்சள்...”

கவிஞர் ந.ஜயபாஸ்கரன், மதுரை வெங்கலக் கடைத்தெருவில் பாத்திரக்கடை நடத்துகிறார். `அர்த்தநாரி அவன் அவள்’ என்ற  இவரது தொகுப்பு முக்கியமான ஒன்று. அண்மையில் ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்’  என்ற  கவிதை நூல் வெளியாகியுள்ளது. “கவிதை பற்றி எந்தத் திட்டமும் வைத்துக்கொள்வது இல்லை. அதற்காக நேரம் ஒதுக்கிச் சிந்திப்பதும் இல்லை. பேரேடுகளில் பற்று-வரவு எழுதும்போது திடீரென ஒரு கவிதை தோன்றும். ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்வேன். பொதுவாக, வியாபாரிக்கு சொல்லில் கவனம் இருக்க வேண்டும். கவிதைக்கும் சொல்தான் முக்கியம். நான் வியாபாரியாக இருப்பது கவிதை எழுத வசதியாக இருக்கிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick