தலையங்கம்

வணக்கம்.

ஒவ்வோர் இதழுக்கும் நீங்கள் அளிக்கும் வரவேற்பிற்கு நன்றிகள்!

அமெரிக்க பாப் இசைக் கலைஞரும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு 2016 -ம் ஆண்டுக்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான பால் பீட்டியின் ‘தி செல்அவுட்’ நூலுக்காக 2016-ம் ஆண்டுக்கான ‘மேன் புக்கர் விருது’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விருதுச் செய்திகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறது ‘விகடன் தடம்’.

எஸ்.ராமகிருஷ்ணனின் விரிவான நேர்காணல், வண்ணதாசனின் நினைவுகளில் நெகிழும் கலாப்ரியாவின் நட்புக்காலப்பதிவு, அ.முத்துலிங்கம் சந்தித்து பதிவுசெய்த கனடிய நாடாளுமன்றத்தின் ஒரே தமிழரான ஆனந்த சங்கரியின் நேர்காணல், ஸ்ரீநேசன் கவிதைகள் குறித்த ந.முருகேசபாண்டியனின் கட்டுரை, கூடவே, மா.அரங்கநாதன், சிற்பி ராஜன்,  ஆதவன் தீட்சண்யா, ஜோ டி குரூஸ், சுயம்புலிங்கம், மகுடேசுவரன், போகன் சங்கர் என பல ஆளுமைகளின் பங்களிப்பில் இதழைக் கோர்த்திருக்கிறோம்.

சி.மோகன் ஓவியம் குறித்து எழுதும் புதிய தொடர், இந்த இதழிலிருந்து  தொடங்குகிறது. இன்னும் சிறுகதைகளும், கவிதைகளுமாக இதழ் உங்கள் கைசேர்கிறது.

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick