மீண்டெழ விரும்புகிறேன் - மனுஷி

மனுஷி

சிறு செடியை இடம்மாற்றி
நட்டு வைப்பதுபோல்
இங்கிருந்து எனை
இடம்மாற்றி வையுங்கள்
நான் புதிதாகத் துளிர்க்க விரும்புகிறேன்.

எனது நினைவுகளில் சிலவற்றைத்
துடைத்துச் சுத்தம் செய்துகொள்ள
அல்லது
இல்லாமல் ஆக்கிவிட
ஏதேனும் மந்திரச் சொல் உண்டெனில்
எனக்குக் கையளியுங்கள்.
நான் மீண்டெழ விரும்புகிறேன்.

உறக்கமற்ற இரவுகளில்
மனம் சிதைந்து வெறித்துக்கொண்டிருக்கும்
சுவர்களைவிட்டு வெளியேற
எனக்குக் கருணை புரியுங்கள்
எனது வானத்தில் பறக்க விரும்புகிறேன்.

எனது கனவுலகில்
நடந்துகொண்டே இருக்கிறேன்
ஆனால்...
நான் ஆழ்ந்து உறங்க விரும்புகிறேன்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick